எச்.எம்.எம்.பர்ஸான்-
கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் இராணுவத்தினருடன் பொதுமக்கள் இணைந்து நகர சுத்தப்படுத்தல் விசேட வேலைத்திட்டம் ஒன்றினை இன்று ஞாயித்துக்கிழமை (4) மேற்கொண்டனர்.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் அறிவுறுத்தலுக்கு அமைய 'சேர்ந்து காப்போம்' 'பாதையில் குப்பை போட வேண்டாம்' எனும் தொனிப்பொருளில் கிழக்கு மாகாணம் பூராவும் பிரதான வீதிகளை மையப்படுத்தி இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
குறித்த இவ் வேலைத்திட்டத்தில் இணைந்து கொண்ட இராணுவத்தினர் வர்த்தக நிலைய உரிமையாளர்களுக்கு குப்பைகளை முறையாக சேமித்து அப்புறப்படுத்துமாறு ஆலோசனைகளை வழங்கினர்.
இத்திட்டத்தில் சேகரிக்கப்பட்ட பொலித்தீன்களை இராணுவத்தினர் ஒன்று சேர்த்து எறித்தத்துடன், குப்பைகளை பிரதேச சபையின் உழவு இயந்திரங்கள் மூலம் அப்புறப்படுத்தினர்.
இதன் போது கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.நெளபர், உப தவிசாளர் யூ.எல்.அஹமட், மற்றும் இராணுவ அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment