மீன் பிடி பூனையின் சடலம் மீட்பு


க.கிஷாந்தன்-

திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை நாவலப்பிட்டி பிரதான வீதியில் கெலிவத்தை தமிழ் வித்தியாலயத்திற்கு முன்பாக உள்ள தேயிலை மலையில் 17.10.2020 அன்று மதியம் சுமார் இரண்டடி நீளமான உயிரிழந்த நிலையில் மீன் பிடி பூனையின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக பத்தனை பொலிஸார் தெரிவித்தனர்

பொதுமக்கள் வழங்கிய தகவலையடுத்தே குறித்த மீன் பிடி பூனையின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

இந்த மீன் பிடி பூனையை விஷ உணவு உட் கொண்டு உயிரிழந்துள்ளதா அல்லது எவரேனும் கொன்றுவிட்டனரா? என்பது தொடர்பாக பத்தனை பொலிஸார் பல்வேறு கோணங்களில் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் உடலில் இரண்டு காயங்கள் காணப்பட்டது. இது மனிதர்களுக்கு தீங்கு செய்யும் விலங்கு அல்ல என வன விலங்கு அதிகாரிகள் தெரிவித்தனர். இதனை பாதுகாப்பது மட்டுமல்ல எம்மையும் பாதுகாக்க தெளிவூட்டல்கள் அவசியம் என மக்கள் தெரிவித்தனர்.

குறித்த மீன் பிடி பூனையின் சடலத்தை நல்லதண்ணி வனஜீவராசிகள் எடுத்து சென்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :