எஸ்.அஷ்ரப்கான்-
சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. ஏற்பாட்டில் இலவச பொது ஆங்கில கருத்தரங்கு கருத்தரங்கு இம்முறை கா.பொ.த. உயர்தரப் பரீட்சை எழுதும் மாணவ மாணவிகளுக்காக சாய்ந்தமருது இளைஞர் பயிற்சி நிலையத்தில் அண்மையில் நடைபெற்றது.
சாய்ந்தமருது வை.எம்.எம்.ஏ. தலைவர் ஏ.ஜி.அன்வர் தலைமையில், செயலாளர் எஸ். அஷ்ரப்கானின் வழி நடாத்தலில் இடம்பெற்ற இந்த இலவச ஆங்கில கருத்தரங்கிற்கு சுமார் 120 க்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் கலந்து கொண்டனர்.
இன் நிகழ்வுக்கு பேரவையின் திட்ட தவிசாளர் எஸ்.தஸ்தகீர் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் கே.எல். சுபைர் மற்றும் இளைஞர் பயிற்சி நிலையத்தின் பொறுப்பதிகாரி எம்.டீ.ஹாரூன் மற்றும் கிளையின் அமைப்பாளர் எம்.எஸ்.எம் இம்தியாஸ் மற்றும் கிளையின் உயர்பீட உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இக்கருத்தரங்கு மிகவும் பிரபல்யமான வளவலார்களான எம்.வீ. நௌஷாத், ஏ.எல் சிஹாம் மற்றும் ஆசீர் அஹமட் அவர்களினால் நடாத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment