கல்முனை மாநகரசபை உறுப்பினரின் மாதாந்த கொடுப்பனவில் மாதமொரு வேலைத்திட்டம்!

நூருல் ஹுதா உமர்-

ல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி பி.எம். ஷிபான் அவர்களால் அவருடைய மாதாந்த சம்பளத்தைக்கொண்டு செயற்படுத்தப்பட்டுவரும் "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சி நிரலின் கீழ் இம்முறை 'ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004 சமூக சேவை அமைப்புக்காக' ஒக்டோபர் மாத நிதி கையளிப்பு இன்று மருதமுனையில் இடம்பெற்றது.

மருதமுனையை மையமாகக் கொண்டு கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக பொதுச்சேவைகளை செய்துவருகின்ற 'ஷம்ஸ் நண்பர்கள் வட்டம்-2004 சமூக சேவை அமைப்பின் பொருளாளர் ஆர்.எம்.பஸால் அமூன், செயளாளர் ஏ.ஆர்.எம். கியாஸ், செயற்குழு உறுப்பினர் எம்.எம்.எம். சிபாம் உள்ளிட்டோரிடம் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி பி.எம். ஷிபான் நிதியை கையளித்தார். கடந்த மாத "மாதம் ஒரு வேலைத்திட்டம்" நிகழ்ச்சி நிரலின் கீழ் மருதமுனை அல்- மினன் பாடசாலைக்கு நிலற்குடை அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடதக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :