Jf.காமிலா பேகம்-
கம்பஹா, திவுலப்பிட்டிய பிரதேசத்தில் அடையாளம் காணப்பட்ட கொரோனா தொற்றுடைய பெண்ணின் கணவர் முச்சக்கர வண்டி சாரதி என்பதால் மிகவும் அவதானம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
திவுலப்பிட்டிய சுகாதார வைத்திய அதிகாரி
எஸ்.யூ.டி குணத்திலக்க இதனை தெரிவித்தார்.
அதேவேளை குறித்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நேரத்தில் இருந்து வெளிநபர்கள் எவரும் அவருடன் நெருங்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும் குறித்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த இன்னுமொரு பெண் தலைமறைவாக உள்ளார் என்றும் அவர் கூறினார்.
0 comments :
Post a Comment