காரைதீவு றீம் பார்க் பாலர் பாடசாலையின் சர்வதேச சிறுவர் தின நிகழ்வும், சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றத்திறப்பு விழாவும்.நூருல் ஹுதா உமர்-
ர்வதேச சிறுவர் தின நிகழ்வொன்று காரைதீவு றீம் பார்க் பாலர் பாடசாலையின் ஆசிரியர் கே.திலகமணி அவர்களின் தலைமையில் இன்று (01) கொண்டாடப்பட்டது.காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வழிகாட்டலில், மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி அமைச்சின் நிதி ஒதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட முன்பள்ளி சிறுவர்களுக்கான விளையாட்டு முற்றத்திறப்பு விழாவும் இதே நேரம் அங்கு இடம்பெற்றது.
இந் நிகழ்வில் காரைதீவு பிரதேசசெயலக உதவிப் பிரதேச செயலாளர் எஸ்.பார்த்தீபன், காரைதீவு மக்கள் வங்கி முகாமையாளர் ரி.உமாசங்கர், பிரதேசசெயலக முன் பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகஸ்தர் .ஏ.ஜெஸ்மீர், பொருளாதார அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஆர்.கிருஸ்ணமாலினி. பெற்றோர் சங்கத்தலைவர் ரி.வினாயகமூர்த்தி, மற்றும் மாணவர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் சிறுவர்கள் மற்றும் பெற்றோர்களின் ஊர்வலமும், பெற்றோர்கள்,சிறுவர்களின் கலை நிகழ்வுகளும் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :