J.f.காமிலா பேகம்-
மினுவாங்கொட ஆடைக் கைத்தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட கொரோனா கொத்தணி தொற்றாளர்களின் எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது. சகல பகுதிகளிலும் கொரோனா அச்சுறுத்தல் காணப்படுவதை நினைவில் வைத்துக்கொண்டு செயற்படுமாறு இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வாபொதுமக்களை கேட்டுள்ளார்.
இன்று காலை நாட்டில் கொவிட் 19 தொற்றாளர்கள் 194 பேர் இனங்காணப்பட்டதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவிக்கிறது. இவர்கள் மினுவாங்கொட ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுடன் தொடர்புபட்டவர்கள் என அம்மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இதற்கமைய மினுவாங்கொட ஆடைக் கைத்தொழிற்சாலையுடன் தொடர்புபட்ட கொவிட் 19 கொத்தணியின் மொத்த எண்ணிக்கை ஆயிரத்து 591 ஆக அதிகரித்துள்ளது.
இவர்களில் ஆயிரத்து 36 பேர் ஆடைக் கைத்தொழிற்சாலையின் ஊழியர்கள் ஆவர். ஏனைய 555 பேர் அவர்களுடன் தொடர்புபட்டவர்கள். கொவி;ட் தொற்றாளர்கள் பல மாவட்டங்களில் இனங்காணப்பட்ட போதிலும் கூடுதலான தொற்றாளர்கள் கம்பஹா மாவட்டத்திலிருந்தே பதிவு செய்யப்படுவதாக இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் சகல இடங்களிலும் கொவிட் அச்சுறுத்தல் காணப்படுவதை நினைவில் வைத்து சகலரும் செயற்படவேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
கொரோனா வைரஸ் பரவிவரும் இவ்வேளையில் தனிமைப்படுத்தலுக்காக முன்வருவோர், பாராட்டப்படவேண்டியவர்கள் என அரச ஒளெடத கூட்டுத்தாபனத்தின் தலைவர் வைத்திய நிபுணர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார். சரியான தகவல்களைப் பெற்று போதிய விளக்கத்தை பெறவேண்டுமென அவர் பொதுமக்களை கேட்டுள்ளார்
0 comments :
Post a Comment