எச்.எம்.எம்.பர்ஸான்-
நபர் ஒருவரின் காணமல் போன ஐம்பதாயிரம் ரூபாய் பணத் தொகையை கண்டெடுத்த நபரொருவர் அதை உரியவரிடம் ஒப்படைத்துள்ள சம்பவமொன்று செவ்வாய்க்கிழமை (6) இடம்பெற்றுள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மாவடிச்சேனை பாடசாலை வீதியைச் சேர்ந்த நபர் ஒருவரின் ஐம்பதாயிரம் ரூபாய் பணம் தொலைந்துள்ளது.
பணத்தை தொலைத்த நபர் அப்பகுதியிலுள்ள நபர்களிடம் பணம் தொலைந்து போன தகவலைக் கூறியுள்ளார்.
அவ்வேளையில், வீதியில் கிடந்த குறித்த பணத் தொகையினை கண்டெடுத்த நபர் ஒருவர் பணத்தை பள்ளிவாயால் ஒன்றில் ஒப்படைப்பதாக பிரதேச மக்களிடம் கூறியுள்ளார்.
பிரதேச மக்கள் பணத்தை கண்டெடுத்தவரிடம், பணத்தை தொலைத்த நபரின் தகவலை வழங்கியுள்ளனர்.
உடனடியாக பணத்தை கண்டெடுத்த நபர் உரியவரிடம் ஒப்படைத்துள்ளார்.
பணத்தை கண்டெடுத்து ஒப்படைத்த நபருக்கு பண உரிமையாளரும் பிரதேச மக்களும் நன்றிகளை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment