பன்றிக்கு வெடிவைத்து கொலை செய்த மூவர் கைது


நோட்டன் பிரிட்ஜ்எம்.கிருஸ்ணா-

ட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவளை தோட்டபகுதியில் பன்றிக்கு வெடிவைத்து கொலை செய்த மூவரை ஹட்டன் பொலிஸார் கைது செய்துள்ளனர்

இந்த சம்பவம் 19.10.2020 திங்கள் கிழமை காலை இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்

டிக்கோயா தரவளை பகுதியில் பன்றியினை வெடி வைத்து கொலை செய்து இறைச்சியினை விற்பனை செய்வதற்காக முச்சக்கர வண்டியில் ஏற்றி சென்று கொண்டிருந்த போதே பொலிஸார் சுற்றிவலைத்துள்ளனர்


பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது டிக்கோயா மணிக்கவத்த பகுதியில் வைத்து மூன்று சந்தேக நபர்களும் கைது செய்யபட்டதோடு முச்சக்கர வண்டியிலிருந்த பன்றி இறைச்சியையும் கைப்பற்றியுள்ளனர்


குறித்த மூன்று சந்தேக நபர்களும் மது போதையில் இருந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலை படுத்த அட்டன் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தனர்


https://we.tl/t-xywOTywQpr7 AttachmentsReplyReply allForward

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :