நிலவில் 4Gயை அமைக்க நொக்கியாவுடன் நாசா ஒப்பந்தம்!


எம்.ஜே.எம் பாரிஸ்-

ந்திரனை சொந்தம் கொண்டாடும் முயற்சியில் அமெரிக்காவின் நாசா ஈடுபடத் தொடங்கியுள்ளது. சந்திரனில் உள்ள வளங்களுக்கான புதிய சந்தையை உருவாக்கும் செயல்முறையை அமைத்து வருகிறது. இதற்காக அங்குள்ள கனிமங்களையும், கனிமப் படிவங்களையும் எடுக்கக்கூடிய உலகெங்கிலும் உள்ள தனியார் நிறுவனங்களைத் நாசா தேடுகிறது.

அது போல் நிலவில் 4G நெட்வொர்க்கை அமைக்க பிரபல செல்போன் நிறுவனமான நொக்கியாவுடன் நாசா ஒப்பந்தம் போட்டுள்ளது.

2028ம் ஆண்டுக்குள் நிலவுக்கு விண்வெளி வீரர்களை அனுப்பி ஆய்வு செய்வதற்கான பணிகளை தீவிரப்படுத்தியுள்ள நாசா, அதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க, பல நிறுவனங்களுடன் $370 Million ( சுமார் 6,800 கோடி ரூபா ) ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளது.

அந்த வகையில், நிலவில் ஆய்வு செய்யும்போது விண்வெளி வீரர்கள் விண்கலத்துடன் தொடர்புகொள்வதற்கும், HD தரத்திலான வீடியோக்களை அனுப்பவும், நிலவின் மேற்பரப்பில் 4G நெட்வொர்க்கை அமைக்க நொக்கியாவுக்கு இந்திய மதிப்பில் $14.1 Millionயை ( சுமார் 260 கோடி ரூபா ) நாசா வழங்கியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :