20ஆவது திருத்தம்-மகாநாயக்க தேரர்கள் இடையே மோதல்


J.f.காமிலா பேகம்-

20 ஆவது திருத்தச்சட்டமூலம் அவசியமில்லை என்று இலங்கை அமரபுர ராமஞ்ஞ சாமக்ரி சங்க சபை நேற்று வலியுறுத்திய நிலையில், அப்படியொரு தீர்மானம் பற்றி தனக்கு தெரியது என்று ராமாஞ்ஞ பிரிவின் மகாநாயக்க தேரர் நாபானே பேமசிறி தெரிவித்துள்ளார்.

கண்டியில் இன்று நடந்த ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ராமாஞ்ஞ பிரிவு உட்பட சங்க சபை கூட்டத்திற்கு உடல்நலக்குறைவு காரணமாக நான் செல்லவில்லை. இந்நிலையில் 20ஆவது திருத்த யோசனைக்கு எதிராக தீர்மானம் எடுக்கப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்படவில்லை. அவ்வாறு அறிவித்திருக்க முன், எனக்கு உத்தியோகபூர்வமாக அறிவித்திருக்க வேண்டும். செயலாளர்கள் அவ்வாறு செய்யாவிட்டால் யோக்கியமான பணியும் அல்ல. இந்நிலையில் வெளியிட்டிருக்கும் கருத்துக்களுக்கு பிரிவு பொறுப்பேற்காது என்று அவர் தெரிவித்தார்.

சங்க சபையினால் வெளியிடப்பட்டுள்ள கருத்தானது அரசியல் சார்ந்ததாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்று குறிப்பிட்ட அவர், அரசியல்சார்ந்த விடயங்களை சங்க சபை வெளியிடுவதிலிருந்து தவிர்த்துக் கொள்வது நல்லது எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :