அம்பாறை மாவட்ட செயலகத்தில் கொவிட் -19 வைரஸ் பரவல் தொடர்பில் ஆராய்வுபாறுக் ஷிஹான்-
கொவிட் -19 உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு எதிர்கொள்வது தொடர்பில் விழிப்புணர்வு கூட்டம் அம்பாறை மாவட்ட செயலகத்தில் இன்று(5) மாலை இடம்பெற்றது.

நாட்டில் மீண்டும் கொரோனா வைரஸ் காரணமாக அசாதாரண நிலைமை ஏற்பட்டிருந்த நிலையில் இதனை கட்டுப்படுத்துவதற்காக அம்பாறை மாவட்டத்தில் உள்ள பிராந்திய சுகாதார சேவை பணிமனைக்குட்பட்ட சுகாதார வைத்திய அதிகாரிகள் ஏனைய திணைக்கள தலைவர்கள் பொலிஸ் உயர் அதிகாரிகள் இராணுவத்தினர் ஒன்றிணைத்து எவ்வாறு எதிர்கொள்வது என ஆலோசனைகள் இடம்பெற்றன.
இக்கூட்டமானது இந்த விடயம் தொடர்பான நிகழ்வு அம்பாறை மாவட்டச் செயலாளர் டி.எம்.எல்.பண்டாரநாயக்க தலைமயில் இடம்பெற்றுள்ளதுடன் இந்நிகழ்வில் அம்பாறை மேலதிக மாவட்டச் செயலாளர் வீ.ஜெகதீஸன் அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சி. முகம்மட் றியாஸ் கல்முனை பிராந்திய சுகாதார சேவை பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஜி.சுகுணன் பிரதேச செயலாளர்கள் வைத்திய அதிகாரிகள் மதத்தலைவர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்ததுடன் தத்தமது கருத்துக்களை முன்வைத்தனர்.

இதன் போது அரசாங்க சுகாதார நடைமுறைகளை சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அமுல்படுத்தி கொரோனா உள்ளிட்ட தொற்று நோய்களை எவ்வாறு கட்டுப்படுத்தி மக்களை பாதுகாப்பது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :