UNPயின் தலைமை பதவிக்கு வருவதே எனது நோக்கம்! ருவான் விஜேவர்தன!

ஒலுவில் எம்.ஜே.எம் பாரிஸ்-


UNPயின் புதிய துணைத் தலைவராக தெரிவு செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன, எதிர்காலத்தில் கட்சித் தலைமை பதவிக்கு போட்டியிட போவதாகவும், நான் எதிர்காலத்தில் UNPயின் தலைமைப் பதவிக்கு போட்டியிடுவேன். கட்சி தற்போதைய தலைமையுடன் சில மாதங்கள் தொடரும், அதன் பின்னர் ஒரு புதிய தலைவர் தெரிவுசெய்யப்படுவார் என தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு நேற்று கருத்து வெளியிட்டு பேசிய அவர்,

"இப்போது எனது ஒரே நோக்கம் UNPயை மறுசீரமைத்து, கடந்த காலத்தில் UNP கொண்டிருந்த பெருமைகளை மீண்டும் கொண்டு வருவதாகும். நான் நாட்டின் அனைத்து பகுதிக்கும் பயணம் செய்து கட்சியை மறுசீரமைப்பேன்,

புதிய பதவிக்கு தன்னைத் தெரிவுசெய்த கட்சித் தலைமை மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கின்றேன்.

"பதவி நிலையை தீர்மானிக்க செயற்குழு உறுப்பினர்களிடையே ஒரு நல்ல விவாதம் இருந்தது, இறுதியில் வாக்களிக்க முடிவு செய்யப்பட்டது.

ஒரு ரகசிய வாக்குப்பதிவு இருந்தது, எல்லாமே சுமுகமாக இறுதி செய்யப்பட்டது. சக போட்டியாளர் ரவி கருணநாயக்கவுடன் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை,

கட்சியை பெரும் உயரத்திற்கு கொண்டு செல்ல அவருடன் இணைந்து பணியாற்ற நான் எதிர்ப்பார்த்திருக்கின்றேன்” என கூறியுள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :