மாத்தறை பிரதேசத்தில் கொரோனா அச்சம் ஏற்பட்டுள்ளது.
மாத்தறையிலுள்ள ஹோட்டல் ஒன்றிலிருந்து இன்று காலை ரஷ்யாவுக்கு செல்லவிருந்த ரஷ்யப் பிரஜைக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இன்று காலை அந்த நபர் தனியார் பி.சி.ஆர். பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டார். அதன் அறிக்கை வெளிவந்த நிலையில், கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அவர் தங்கியிருந்த ஹோட்டலில் இருந்த ஊழியர்கள், ரஷ்யப் பிரஜை பயணித்த முச்சக்கர வண்டி சாரதிகள், அவர் நெருங்கிப் பழகிய நபர்கள் என 100 பேர்வரை பி.சி.ஆர் பரிசோதனைக்கு உள்ளாக்கப்பட்டு வருகின்றனர்.
மேலும் பலர் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டிருக்கின்றனர்

0 comments :
Post a Comment