ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் வழிகாட்டலின் கீழ் 50 ஆயிரம் பட்டதாரிகளை பயிற்சிக்காக இணைத்துக் கொள்ளும் வேலைத்திட்டத்திற்கமைவாக கல்முனை பிரதேச செயலக பிரிவில் தெரிவு செய்யப்பட்ட 305 பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் இன்று 2020.09.01 ஆம் திகதி கல்முனை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் வைத்து கையளிக்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்முனை பிரதேச செயலாளர் அல்ஹாஜ் எம். எம். நஸீர் பிரதம அதிதியாக கலந்து கொண்டு பட்டதாரி பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்களை கையளித்தார்.
இதன்போது கல்முனை பிரதேச செயலக கணக்காளர் அல்ஹாஜ். வை. ஹபீபுல்லாஹ் , உதவி திட்டமிடல் பணிப்பாளர். எம். ஜஹ்பர் , நிருவாக உத்தியோகத்தர், எம்.என்.எம் றம்ஸான் , நிருவாக கிராம சேவை உத்தியோகத்தர் , யூ. எல். பதியுதீன். அபிவிருத்தி ஒருங்கிணைப்பாளர் யாசீன் பாவா, கிராம உத்தியோகத்தர்கள் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.
0 comments :
Post a Comment