இலங்கையில் தொலைபேசி பயனாளர்களிடம் 3 கோடியே 28 லட்சத்து 84 ஆயிரத்து 9 கையடக்க தொலைபேசிகள் இருப்பதாக 2019ம் ஆண்டுக்காக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதனடிப்படையில் 100 நபர்களை எடுத்துக் கொண்டால், அவர்களிடம் 161 கையடக்க தொலைபேசிகள் இருப்பதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இதனை தவிர இலங்கையில் 22 லட்சத்து 99 ஆயிரத்து 760 நிலையான தொலைபேசிகள் இருக்கின்றன.
இவற்றில் கம்பி இணைப்புடன் கூடிய 12 லட்சத்து 44 ஆயிரத்து 569 தொலைபேசிகளும், கம்பி இணைப்பில்லாத 10 லட்சத்து 5 ஆயிரத்து 218 நிலையான தொலைபேசிகள் உள்ளன.
அத்துடன் 2019ம் ஆண்டு ஒரு கோடியே 34 லட்சத்து 8 ஆயிரத்து 403 பேர் இணையத்தள சேவையுடைய கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்தியுள்ளனர்.
இந்த தகவல்கள் அனைத்தும் இலங்கை தொலைத் தொடர்புகள் ஒழுங்குப்படுத்தும் ஆணைக்குழு மற்றும் சனத் தொகை மற்றும் புள்ளிவிபரத் திணைக்களத்திடம் இருந்து பெறப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment