போதை மாத்திரைகளுடன் ஒருவர் கைது...


எஸ்.எம்.எம்.முர்ஷித்-


வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலைநகர் பிரதேசத்தில் போதை மாத்திரைகள் மற்றும் கேரளா கஞ்சாவுடன் இளைஞர் ஒருவர் திங்கட்கிழமை காலை கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் போதை தடுப்பு பிரிவு பொலிஸ் உத்தியோகத்தர் எம்.பி.எம்.தாஹாவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து போதை தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி ஜே.எம்.துசிதகுமார தலைமையில் பொலிஸ் பரிசோதகர்களான ஜி.ஐ.புஸ்பகுமார, எஸ்.வாசல, எம்.பி.எம்.தாஹா ஆகியோர் மேற்கொண்ட சுற்றிவலைப்பின் போது பாலைநகரைச் சேர்ந்த 28 வயதுடைய இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த இளைஞனிடம் இருந்து 1538 போதை மாத்திரைகள், 2000 மில்லி கிராம் கேளரா கஞ்சா மற்றும் 20 கிராம் ஹெரோயின் என்பவற்றினை பொலிஸார் கைப்பற்றியுள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி விஜயவீர மேலும் தெரிவித்தார்.

வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் சட்டவிரோத செயல்கள் இடம்பெற்று வரும் நிலையில், போதைப் பொருள் பாவனையினை இல்லாமல் செய்வதற்காக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுளவின் வழிகாட்டலில் பல்வேறு வேலைத் திட்டங்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :