கிரிக்கெட் சூதாட்டம் குறித்து மீண்டும் பரபரப்பு தகவலை வெளியிட்ட அமைச்சர்



J.f.காமிலா பேகம்-
ள்ளுர் கிரிக்கெட் விளையாட்டுப் போட்டிகளிலும் ஆட்டநிர்ணயம் இடம்பெற்று வருவதாக, முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சரும், தற்போதைய கமத்தொழில் அமைச்சருமான மஹிந்தானந்த அளுத்கமகே பரபரப்புத் தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று இரவு வழங்கிய நேர்காணலில் அவர் இந்த தகவலை வெளியிட்டிருக்கின்றார்.
ஏற்கனவே உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியின்போது, இலங்கை அணி ஆட்டநிர்ணயத்தில் ஈடுபட்டதாக அவர் வெளியிட்ட தகவல் விசாரணைக்கு உட்பட்ட நிலையில், இந்த விடயத்தைக் கூறியுள்ளார்.

இதற்கு முன் கூறியதுபோல மும்பையில் நடைபெற்ற உலகக் கிண்ணக் கிரிக்கெட் போட்டியில், இலங்கை அணி வீரர்கள் சதியில் ஈடுபடவில்லை என்றும் ஆனால் விசாரணைக்கு அவர்களே அழைக்கப்பட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டார்.

இரண்டே வாரங்களில் விசாரணைகள் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்டதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட அவர், விசாரணைகள் அவசியம் என்றும் கூறினார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :