ஜோர்தான் நாட்டின் ஸம்ஸம் சர்வதேச தொண்டு நிறுவன நிதி அனுசரணையில் பைத்துல் ஹெல்ப் அமைப்பினால் பெரியநீலாவணை கமு /கமு - அக்பர் வித்தியாலயத்திற்கு நீர்தாங்கியும் இலவச நீர்வழங்கலும் நிர்மாணித்து கொடுக்கப்பட்டது.
பிரதேசத்தில் உள்ள பாடசாலை மாணவர்களினதும், பொதுமக்களினதும் குடிநீர் தேவையை போக்க கல்முனை பிரதேசத்தில் உள்ள பாடசாலைகள், பள்ளிவாசல்களுக்கு இலவச குடிநீர் தாங்கியும் இலவச நீர்வழங்கலும் இவ் அமைப்பினால் கடந்த பல மாதங்களாக நிர்மாணித்து மக்கள் பாவனைக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இதன் ஒரு கட்டமாக 85 ஆயிரம் ரூபா செலவில் பெரியநீலாவணை கமு /கமு - அக்பர் வித்தியாலயத்தில் நிர்மாணிக்கப்பட்ட இவ்வேலைத்திட்டத்தை நேற்று (23) பைத்துல் ஹெல்ப் அமைப்பின் தலைவர் எம்.எச். ரைஸுல் ஹக்கீம் மற்றும் சமுதாய சீர்திருத்த உத்தியோகத்தர் முஹம்மட் சப்ரீன் ஆகியோர் இணைந்து மாணவர்களிடம் பாவனைக்காக கையளித்தனர். இந்நிகழ்வில் அதிபர் ஆசிரியர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
0 comments :
Post a Comment