தேசிய பாதுகாப்பு குறித்து மிக கவனம் செலுத்த வேண்டும்- லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா



எப்.முபாரக்-

தேசிய பாதுகாப்பு குறித்து மிக கவனம் செலுத்த வேண்டும் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
திருகோணமலையிலுள்ள 22ஆவது படைப்பிரிவில் இன்று(10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் அவர் தெரிவிக்கையில்:

இலங்கையின்பொருளாதாரத்திற்கு வரலாற்று முக்கியத்துவத்தை ஒன்று சேர்க்கின்ற பிரதேசம் திருகோணமலையாகும். இலங்கை வரலாற்றில் கடந்த 30 வருடங்களாக நிலவிய நிலைமைகளில் இருந்து இந்த திருகோணமலை பிரதேசத்தை பாதுகாப்பதற்காக முப்படையினரும் சிறப்பாக செயற்பட்டனர்.
இதேபோன்று கடந்த வருடம் இடம்பெற்ற அடிப்படைவாத தாக்குதலைப் போல ஒரு தாக்குதல் இனிமேலும் எமது நாட்டில் நடைபெறாமல் இருப்பதற்கும் எமது இராணுவமும் முப்படையினரும் பல ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதேபோன்று இராணுவத்தினர் பொது மக்களின் நன்மை கருதி பல சமூக சேவைகளிலும் ஈடுபட்டு வருகின்றனர். அதேபோன்று கோவிட் - 19 தனிமைப்படுத்தல் விடயத்திலும் பாரிய சேவைகளை செய்து வந்ததாக அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இதேவேளை ஹெரோயின் கடத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையில்: இராணுவத்தில் இருப்பவர்கள் வெளிநாட்டவர்கள் அல்ல. அவர்களும் இலங்கையை சேர்ந்தவர்கள்.
அவர்கள் சீருடை அணிந்து இருந்தாலும் அவர்களும் இலங்கை நாட்டவர்களே. அதன் பிரகாரம் கடந்த காலங்கள் தொடக்கம் போதைப்பொருள் கடத்தல் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் இராணுவத்தில் இருப்பவர்களை தொடர்புபடுத்திய சந்தர்ப்பங்களும் இருக்கின்றது.

இனிவரும் காலங்களில் போதைப்பொருள் தொடர்பில் யாராவது இனங்காணப்பட்டால் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும் அவர்களை இராணுவத்திலிருந்து வெளியேற்ற நடவடிக்கைகளை முன்னெடுப்பதாகவும் தெரிவித்தார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :