வெற்றி நாயகன் ஹரீஸ் எம்பி யினை பாராட்டி கெளரவிக்கும் மாபெரும் நிகழ்வு இன்று (01) கல்முனை மாநகர முதல்வர் சிராஸ் மீராசாஹிப் தலைமையில் பிரமாண்டமான முறையில் சாய்ந்தமருது சிராஸ் மீராசாஹிபின் இல்லத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் பிரதம அதிதியாக நடந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸ் கலந்து கொண்டு உரையாற்றியபோதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தனது வெற்றிக்காக கலாநிதி ஷிராஸ் மீராசாஹிப் அவர்கள் ஆற்றிய பங்கை தனது வாழ்நாளில் மறக்கவே முடியாது என்று தெரிவித்த ஹரீஸ், ஷிராஸ் அவர்களின் அரசியல் எதிர்காலம் பற்றிய வினா உங்கள் எல்லோர் மத்தியிலும் இருக்கும் என்றும் அப்போது கல்முனைக்கான முதல்வர் கல்முனையில் இருந்து வரவேண்டும் என்ற கோரிக்கை இருந்தபோதும் கூட கல்முனைக்கான முதல்வர் சாய்ந்தமருதில் இருந்து வரவேண்டும் என்ற நிலைப்பாட்டில் நான் இருந்தேன் என்றும் அதேபோல் அவரை நாங்கள் மேயராகவும் ஆக்கினோம் என்றும் அவ்வாறுதான் இந்தத் தேர்தலில் எனக்காக களத்தில் இறங்கி பணியாற்றியவருக்கு நான் எவ்வாறு நன்றிக்கடன் செய்யாமல் இருக்க முடியும் என்று கேள்வியெழுப்பினார்.
கண்டியில் வைத்து தலைவருடன் உரையாடி தலைவரால் வாக்குறுதி பெற்றுக்கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அதன் வெளிப்பாடாகவே கட்சியின் தலைமையால் தற்போதைய கல்முனையின் முதல்வர் அவர்களும் கட்சியின் தவிசாளர் அவர்களும் இந்த நிகழ்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் இதனூடாக சொல்லப்பட்டுள்ள செய்தி என்னவென்றால் ஷிராஸ் அவர்கள் கட்சியின் தலைமையாலும் கட்சியாலும் ஆசீர்வாதிக்கப்பட்டுள்ளார் என்பதேயாகும் என்றும் எதிர்காலத்தில் தேர்தல் ஒன்று வந்தால் ஷிராஸ் அவர்களுக்கு அம்பாறை மாவட்ட மக்கள் பல்லாயிரக்கணக்கான வாக்குகளை வழங்க தயாராகி வருகின்றனர் என்றும் தெரிவித்தார்.
தேசிய அரசியல் நகர்வுகள் குறித்து தெரிவித்த ஹரீஸ், தாங்கள் மக்கள் பிரதிநிதிகளாக மக்களது தேவைகளுக்காக அரசின் முக்கிய பிரதிநிதிகளுடன் பேச முற்படுகின்றபோது கட்சிக்கு துரோகம் இளைக்க முனைவதாக சில ஊடகங்கள் கூச்சலிடுகின்றன என்றும் அவ்வாறான எவ்வித செயற்பாடுகளிலும் தான் ஈடுபடவில்லை. இந்த பிராந்திய மக்கள் அதிகளாவான தேவைகளுடன் வாழ்ந்து வருகின்றனர். இவர்களது தேவைகளை நாங்கள் நிவர்த்திப்பதென்றால் நாங்கள் எல்லோருடனும் பேசியே ஆகவேண்டும் இதில் கூச்சப்படுவதற்கு ஒன்றுமில்லை. ஒழித்துப் பேசுவதற்கும் இல்லை தற்போது இலங்கையில் பலமான ஆட்சி ஒன்று நிறுவப்பட்டுள்ளது. புதிய அரசியலமைப்புக்கான முஸ்தீபுகள் இடம்பெறுகின்றன. இது இலங்கையில் வாழும் முஸ்லிம்கள் பாதிக்கப்படாத வகையில் வரவேண்டும் இதற்காக இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம் பாராளமன்ற உறுப்பினர்களும் ஒன்றுபட்டு அரசுடன் பேசவேண்டும்.
அண்மையில் கூட கல்முனையில் இருக்கும் நகர அபிவிருத்தி காரியாலயத்தை மூடுவதற்கான முயச்சிகள் இடம்பெற்றன அதனை சம்மந்தப்பட்டவர்களுடன் பேசி தடுத்தோம் இவ்வாறெல்லாம் நாங்கள் செயற்படும்போது சிலர் எங்களை வேறு கண்ணாடி அணிந்து பார்க்க முற்படுகின்றனர் என்றும் தெரிவித்தார்.
மேலும் இந் நிகழ்வில் கெளரவ அதிதிகளாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் ஏ.எல் அப்துல் மஜிட்,கல்முனை மாநகர சபை முதல்வர் சிரேஸ்ட சட்டத்தரணி ஏ.எம் ரக்கீப், கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான எம்.எஸ்.எம் நிசார்(ஜேபி), ஏ.எம் பைறோஸ், எம்.எஸ்.எம் ஹரீஸ் நவாஸ், காரைதீவு பிரதேச சபை உறுப்பினர்களான ஏ.எம் பஸ்மீர்,ஏ.எச் றணீஸ்,முன்னாள் கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.நிசார்த்தீன்,ஏ.எச்.எம் நபார்,மாளிகைக்காடு முஸ்லிம் காங்கிரஸ் கிழக்கு வட்டார அமைப்பாளர் எம்.எஸ்.நாசர்,புலவர்மணி மருதூர் ஏ மஜீட், இளைஞர் பாராளமன்றத்தின் முன்னாள் உறுப்பினர் டில்சாத் உட்பட ஆயிரக்கணக்கான மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள்,வர்த்தக சங்கங்களின் பிரதிநிதிகள் என பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
0 comments :
Post a Comment