20 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவின் அறிக்கை நாளையதினம் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளது.
முன்மொழியப்பட்டுள்ள 20 ஆவது திருத்தம் குறித்து ஆராய்வதற்காக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவினால் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
அமைச்சரவை அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோர் இந்த குழுவில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
9 பேர் அடங்கிய இந்த குழுவுக்கு அமைச்சர் ஜீ. எல். பீரிஸ் தலைமை தாங்குகிறார்.
அத்துடன், அமைச்சர் உதய கம்மன்பில, அமைச்சர் அலி சப்ரி, அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் விமல் வீரவன்ச, இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, இராஜாங்க அமைச்சர் எஸ். வியாழேந்திரன், நாடாளுமன்ற உறுப்பினர்களான டிலான் பெரேரா மற்றும் பிரேமநாத் சீ தொலவத்த ஆகியோர் குழுவின் ஏனைய உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், குறித்த குழுவினரின் அறிக்கை நாளையதினம் பிரதமரிடம் கையளிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 comments :
Post a Comment