முஸ்லிம் சமூகத்திற்கு தற்போதைய அரசாங்கத்தில் பாதுகாப்பு உறுதிப்பத்தப்படுமானால் தாங்கள் எதிர் கட்சியிலிருந்தாலும் அரசாங்கத்திற்கு பூரன ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம் -சட்டத்தரணி முஷரப் முதுநபீன்


எம்.எம்.ஜபீர்-
முஸ்லிம் சமூகத்திற்கு தற்போதைய அரசாங்கத்தில் பாதுகாப்பு உறுதிப்பத்தப்படுமானால் தாங்கள் எதிர் கட்சியிலிருந்தாலும் அரசாங்கத்திற்கு பூரன ஒத்துழைப்பை வழங்க தயாராகவுள்ளோம் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்ட சட்டத்தரணி முஷரப் முதுநபீன் தெரிவித்தார்.
சவளக்கடை 5ஆம் கிராமத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பு நேற்று நடைபெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 

நாம் எப்படியானவராக இருக்கப் போகின்றோம் என்பதையும் பாராளுமன்ற எத்தகையதாக இருக்கப் போகின்றது ஜனாதிபதியும் அரசாங்கமும் முஸ்லிம்களிடம் எப்படி நடந்து கொள்ளப் போகின்றது. என்பதை பொறுத்துத்தான் எப்படியான வகிபாகத்தை வகிக்க வேண்டும் என்பது தீர்மானிக்கப்படும் முஸ்லிம்களுக்கு எந்த தீங்கும் விளைவிக்காமல் இனவாத ரீதியாக மக்களை வழிநடத்தாமல் சகல சமூகங்களையும் ஒன்றாக நினைத்து ஒருங்கினைந்த தேசத்தை கட்டியெழுப்ப இந்த அரசாங்கம் முயற்சி செய்யுமாக இருந்தால் நாங்கள் எதிர் கட்சியாக இருந்தாலும் பூரண ஆதரவை வழங்க தயாராகவுள்ளோம்.
மாறாக முஸ்லிம் சமூகம் முடக்கப்படும் நிலைவருமானால் சமூகத்திற்கு எதிரான நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் செய்யுமாக இருந்தால் அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது குரலாக எமது குரல் இருக்கும் என்பதை சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன்.

உரிமை சர்ந்த விடயங்களில் இந்த சமூகத்திற்கு எந்த அநீதி நடைபெறுமாயின் அந்த அநீதிக்கான முதல் குரலாக எங்களுடைய தலைமை றிஷாட் பதியூத்தீன் எப்போதும் இருப்பார் அந்த குரலுடன் சேர்ந்து அம்பாரை மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பாக ஒரே ஒரு பிரதிநிதி என்றவகையில் பாராளுமன்றத்தில் என்றுடைய குரலும் அழுத்தமானதாக இருக்கும் என்பதை இந்த சந்தர்ப்பத்தில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
நீங்கள் என்னை நம்பி எவ்வாறு வாக்களித்தீர்களோ அதேபோன்று நான் ஒரு மாற்றத்தை செய்வேன் என்ற நம்பிக்கையோடு இருங்கள் அம்பாரை மாவட்டத்தில் அரசியலில் புதிய விடிவு பிறந்திருக்கின்றது என நம்பிக்கையோடு இருங்கள் இதற்கு பின்னர் வருகின்ற தேர்தலில் பணம் செலவளித்து தேர்தல் செய்கின்ற எண்ணம் என்னிடம் இல்லை பணம் செலவலிக்காமல் தேர்தல் செய்வதனால் மக்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் பதவியூடாக சேவை செய்வது தான் சரியான வழி என கூறிப்பிட்டார்.
நமக்கு அதிகாரம் கிடைத்தல் மக்களுக்கு நல்லதை செய்வோம் பணத்தை நம்பி அரசியல் செய்கின்ற நிலை வரக்கூடாது என்ற நிலை இந்த மாவட்டத்திலுள்ள ஏனைய கட்சியினருக்கும் உருவாக வேண்டும் அவ்வாறான நிலை உருவாகி எல்லோரும் மக்களுக்கு சேவையாற்ற முற்படுவர்களாக விருந்தால் எமது மக்களின் பல பிரச்சினைகளை இலகுவாக தீர்க்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :