தனக்கு வாக்களித்த மாளிகைக்காடு கிராம மக்களுக்கு நன்றி தெரிவித்தார் ஹரீஸ் எம்.பி.....


டந்து முடிந்த பொதுத்தேர்தலில் திகாமடுல்ல மாவட்டத்தில் தெரிவுசெய்யப்பட்ட முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களில் அதிகூடிய விருப்பு வாக்கு பெற்று வெற்றி பெற்ற பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும்,நன்றி தெரிவிக்கும் நிகழ்வும் இன்று(15) காரைதீவு பிரதேச சபை உறுப்பினர் எம்
எச்.எம் இஸ்மாயில் மாளிகைக்காடு மேற்கு வட்டாரத்தில் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட முன்னாள் இராஜாங்க அமைச்சரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம் ஹரீஸ் நடந்து முடித்த தேர்தலில் பொத்துவில் தொகுதியில் மாளிகைக்காடு கிராமத்தில் பெருவாரியான வாக்குகளை முஸ்லிம் காங்கிரஸ் கட்சிக்கும்,எனக்கும் வழங்கி வெற்றி பெற வைத்த மாளிகைக்காடு கிராம மக்களுக்கு நன்றிகளை தெரிவித்து கொள்ளுவதோடு எதிர்கால அரசியல் செயற்பாடுகளிலும் அபிவிருத்தி முன்னெடுப்புகளிலும் என்றும் நன்றியுனர்வோடு இருப்பேன் எனவும் கருத்து தெரிவித்தார்.
இந் நிகழ்வில் மாளிகைக்காடு முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் அமைப்பாளர் ஏ,சி.எம் கடாபி உட்பட கட்சியின் போராளிகள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -

0 comments :