ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சக்தியில் திகாமடுல்ல மாவட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் தெரிவுசெய்யப்பட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் மத்தியமுகாம் பிரதேசத்தில் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் மக்கள் சந்திப்பும் ஊர் வலமும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாவிதன்வெளி பிரதேச அமைப்பாளர் ஏ.சீ.நிஸார் ஹாஜியாரின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்றது.
மத்தியமுகாம் பிரதேச மக்களினால் பெரும்வரவேற்பளிக்கப்பட்டு ஊர்வலமாக 12ம் ஆம் கொளனி ஆலயடிச் சந்தியிலிருந்து 1ஆம் வட்டாரம், 3ஆம் வட்டாரம் ஊடாக மத்தியமுகாம் நகரிற்கு சென்று மீண்டும் 12ம் கொளனி ஆலயடிச் சந்தியுடாக 2ஆம் வட்டாரத்துடன் ஊர்வலம் நிறைவுபெற்றது.
இவ்மக்கள் சந்திப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் 12ஆம் கொளனி 2ஆம் வட்டார கிளைக் குழுத் தலைவர் எம்.எச்.முனாப் தலைமையில் 12ஆம் கொளனி, 2ஆம் வட்டாரத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் நாவிதன்வெளி பிரதேச சபை உறுப்பினர் எம்.பி.நவாஸ், மத்தியமுகாம் அமைப்பாளர் எம்.எச்.சலீம், 12ஆம் கொளனி கதரினா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் ஏ.எச்.றிஸ்லான், கழக உறுப்பினர்கள், கட்சியின் கிளைக்குழு தலைவர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலர் கலந்துகொண்டனர்
0 comments :
Post a Comment