பீடை நோய் காரணமாக விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட நிகழ்வொன்று இம்மாதம் 18ம் திகதி காலை 9 மணிக்கு வாழைச்சேனை கமநல சேவைகள் நிலையத்தில் இடம்பெறவுள்ளது.
மட்டக்களப்பு மாவட்ட விவசாய திணைக்களத்தின் ஏற்பாட்டில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வில் விவசாயிகள் எதிர்நோக்கும் பீடை நோய் பிரச்சினைகளை ஆராய்ச்சி செய்து தீர்வுகள் வழங்கப்படவுள்ளன.
இலங்கையின் பல பாகங்களிலும் இருந்து விவசாய ஆராய்ச்சி உத்தியோகத்தர்கள் வருகை தரவுள்ள இந்நிகழ்வில் விவசாய செய்கையில் பீடை நோய் தாக்கம் உள்ள விவசாயிகள் தங்களின் மாதிரிகளுடன் அன்றைய தினம் வருகை தந்து பயன் பெற்றுக் கொள்ளுமாறு மட்டக்களப்பு விவசாய திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.
0 comments :
Post a Comment