திருகோணமலை மாவட்டத்தின் சீனக்குடா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 60 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை தம்வசம் வைத்திருந்த மூவரை இம்மாதம் 27 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எம்.அன்பாஸ் இன்று(16) உத்தரவிட்டார்.
திருகோணமலை, மட்கோ,கூம்பூகார்,பாலையூற்று பகுதியைச் சேர்ந்த 21,30 மற்றும் 23 வயதுடைய மூவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் இணைந்து திருகோணமலை கருமலையூற்று அண்டிய பகுதியில் 60 மில்லிகிராம் ஹேரொயின் போதைப் பொருளை மூன்று சந்தேக நபர்களும் தலா இருபது மில்லிகிராம் வீதம் தம் வசம் வைத்திருந்த நிலையில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது செய்து திருகோணமலை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
0 comments :
Post a Comment