09ஆவது நாடாளுமன்றத்திற்கான உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக இன்று நடத்தப்பட்ட வாக்கெடுப்பு இன்று மாலை 05 மணியுடன் முடிவுக்கு வந்தது. தற்சமயம் வாக்குப் பெட்டிகள் தயார்செய்யப்பட்டு வருவதோடு பொலிஸாரின் பாதுகாப்புடன் அவை வாக்கெண்ணும் மத்திய நிலையங்களுக்கு வாகனங்களில் எடுத்துச் செல்லப்படவுள்ளன.
நாடு முழுவதிலும் 60 சதவீதமான வாக்குப்பதிவு இடம்பெற்றுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அந்தவகையில், இதுவரை வெளியான முடிவுகளின்படி யாழ்ப்பாணத்தில் 4 மணிவரை 64% வாக்கு பதிவு இடம்பெற்றுள்ளதுடன்,
இரத்தினபுரி 70%, திருகோணமலை 69%, மாத்தளை 68%, கேகாலை 67%, கண்டி 65%, மொமானராகல 65%, கம்பஹா 62%, கொழும்பு 60%, களுத்துறை 60%, காலி 60%,புத்தளம் 60%, பொலநறுவை 55% வாக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன
12985 வாக்குச் சாவடிகளில் இன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணிவரை வாக்குப் பதிவுகள் நடைபெற்றன.
இன்று காலை 6 மணி தொடக்கம் நண்பகல் வரை சுமார் 421 தேர்தல் சட்ட மீறல்கள் குறித்து முறைப்பாடுகளும் பதிவாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 comments :
Post a Comment