காரைதீவு சகா-
இலங்கையின் 9வது பாராளுமன்ற தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஏழு பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவுசெய்வதற்காக 525 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு (5)நடைபெற்றது.
இலங்கைவரலாற்றில் முதல்தடவையாக கொரோனா சுகாதார நடைமுறைகளுக்கமைவாக இவ்வாக்களிப்பு இடம்பெற்றமை சுட்டிக்காட்டப்படத்தக்கது.

மக்கள் கியுவரிசையில் கைகழுவி, முகக்கவசத்துடன் சமுக இடைவெளியைப்பேணியவாறு காத்திருந்து வாக்களிப்பில் கலந்துகொண்டனர்.
இதுவரை வாக்களிப்பு எவ்வித முறைகேடுகளுமின்றி சுமுகமாக நடைபெற்றதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசஅதிபருமான டி.எம்.எல்.திசாநாயக்க தெரிவித்தார்.
இங்கு காரைதீவில் வாக்காளர்கள் வாக்களிப்பதற்காகச் செல்வதைக்காணலாம்.
அம்பாறை மாவட்டத்தில் 7 உறுப்பினர்களை தெரிவு செய்ய 20 அரசியல் கட்சிகள், 34 சுயேட்சைக்குழுக்கள் சார்பில் 540 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மாவட்டத்தில் 5 இலட்சத்து 13 ஆயிரத்து 979 பேர் வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளார்கள். அதற்கமைய அம்பாறை தேர்தல் தொகுதியில் 177144 பேரும், பொத்துவில் தேர்தல் தொகுதியில் 168793 பேரும், சம்மாந்துறை தேர்தல் தொகுதியில் 90405 பேரும், கல்முனை தேர்தல் தொகுதியில் 77637 வாக்களிக்கத்தகுதி பெற்றுள்ளனர்.இங்கு 525 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 6ஆயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

0 comments :
Post a Comment