திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிராந்திய சுகாதார அலுவலகத்திற்குட்பட்ட பகுதியில் இராணுவ வீரயொருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து கந்தளாய் நகரில் மருந்துகள் தெளிப்பு நடவடிக்கைகள் இன்று(16)முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வர்த்தக நிலையங்கள்,பஸ் நிலையம் மற்றும் வங்கிகள் போன்றவற்றிற்கு கந்தளாய் பிராந்திய சுகாதார வைத்திய அத்தியட்சகரின் பணிப்புரைக்கமைய பொலிஸ் விசேட அதிரடைப்படையினர் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினரும் இணைந்து மருந்துகள் விசிறும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றார்கள்.
கொரொனா தொற்றாளர் சென்றதாக கண்டறியப்பட்ட ஐந்து வர்த்தக நிலையங்கள் கந்தளாயில் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.