எப்.முபாரக்-நாட்டின் பிரதமராக பதவியேற்று ஒரு வாரத்தில் கந்தளாய் சீனித்தொழிற்சாலையை ஆரம்பிப்பேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
கந்தளாயில் நேற்று (3) மாலை ஐக்கிய மக்கள் சக்தியின் வேற்பாளர்களை ஆதரித்து கந்தளாய் குணவர்த்தனா மண்டபத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்திலே அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்:
நான் பதவியேற்று முதலாவது செய்யும் செயற்பாடு தான் எரிபொருட்களின் விலையை குறைப்பது,மக்களின் வரிச்சுமையை குறைப்பது மற்றும் இன்னோரன்ன வேலைகளை மேற்கொள்வது.
இம்மாவட்டத்தில் பாரிய வீட்டுத் திட்ட முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளோம்.177 மில்லியன் ரூபாய்களை நான்கரை வருடத்திற்குள் இம்மாவட்டத்தில் முன்னெடுத்துள்ளோம் அதேபோன்று இதன் மூலம் 11ஆயிரத்து 170 குடும்பங்கள் நன்மையடைந்துள்ளார்கள்.
168வீட்டுத்திட்ட கிராமங்களை உருவாக்கியுள்ளோம் இது இலேசாக மேற்கொள்ளப்பட்ட வேலைகள் அல்ல பாரிய சிரமத்தின் மத்தியில் இதனை நாம் மேற்கொண்டோம்.
பல இளைஞர் யுவதிகளுக்கான வேலைவாய்ப்பு மற்றும் மூதூர் சேருவில மற்றும் திருகோணமலை மூன்று தேர்தல் தொகுதிகளிலும் மூன்று கைத்தொழில் பேட்டைகளை அமைத்து இப்பகுதி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வருவோம்.
கந்தளாய் சீனித்தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பாக காரணங்களை கண்டறிந்து விரைவில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.
கந்தளாய் சீனித்தொழிற்சாலையை ஆரம்பிப்பது தொடர்பாக காரணங்களை கண்டறிந்து விரைவில் நடவடிக்கைகளையும் மேற்கொள்வோம் என்றார்.