ஜே.எப்.காமிலா பேகம்-
சிங்கள மக்களின் வாக்குகளால் தமது அரசாங்கம் வெற்றி பெற்றிருந்தாலும் தமிழ் மக்களை கைவிடமாட்டேன் என்று பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை, குடாவெல்ல பிரதேசத்தில் நடந்த பிரசாரக் கூட்டத்தில் பிரதமர் பங்கேற்றினார்.
அதில் பேசியபோது மேற்கண்டவாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
“தெற்கு மக்களின் வாக்குகளால் வெற்றியீட்டிய போதிலும், வடக்கு, கிழக்கு மக்களை மறக்கப்போவதில்லை.
வடக்கு, கிழக்கு மக்களின் வாக்குகள் இன்றி நாட்டுதலைவரை தெரிவு செய்ய முடியாது என்கிற ஐக்கிய தேசிய கட்சியின் சிந்தனையை கடந்த தேர்தலின் மக்கள் உடைத்து விட்டனர்” என்றும் அவர் கூறினார்.