நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பணியாற்றும் வெளி கள உத்தியோகத்தர்களுக்கான கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளுக்காக கையுறை முக கவசம் என்பன வழங்கப்பட்டுள்ளன.
இன்று(2) நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இப்பொருட்கள் யாவும் வழங்கி வைக்கப்பட்டது.
உலக தரிசனம் அமைப்பிடம் பிரதேச செயலாளர் விடுத்த வேண்டுகோளிற்கமைய இன்று இப்பொருட்கள் பிரதேச செயலகத்தில் உள்ள திட்டமிடல் பிரிவு நிர்வாக பிரிவு சமூர்த்தி பிரிவு காணிப்பிரிவு சமூக சேவை பெண்கள் மகளீர் அபிவிருத்தி பிரிவு கணக்கு பிரிவு கிராம அபிவிருத்தி பிரிவு மேலதிக மாவட்ட பதிவாளர் பிரிவு உள்ளிட்ட பிரிவுகளை சேர்ந்த வெளி கள உத்தியோகத்தர்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நிர்வாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் உட்பட அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பட்டதாரி பயிலுநர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
மேலும் தற்போது நாடு பூராகவும் மூன்றாம் கட்ட கொரோனா அனர்த்த நிலையை அறிவிக்கப்பட்ட சூழலில் வெளி கள உத்தியோகத்தர்களின் பாதுகாப்பு கருதி சுமார் 80 க்கு மேற்பட்ட கையுறைஇ முக பாதுகாப்பு அங்கிகளும் உலக தரிசன அமைப்பின் நாவிதன்வெளி பிராந்திய முகாமையாளர் எஸ்.செல்வபதி ஊடாக அதிபர்களிடம் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.