சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையில் ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன முஸ்லீம் கூட்டமைப்பின்
தேசிய அமைப்பாளராக ஏ.எல்.எம் உவைஸ் ஹாஜியார் கொழும்பில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதன் பொதுக்கூட்டமானது கடந்த திங்கட்கிழமை பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் கலுபொவில ரோஸ்வுட் உபசரிப்பு மண்டபத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் SLPP ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன கட்சிக்கு தனது முக்கிய அதிகாரிகளை நியமிக்கப்பட்டுள்ளனர் என அறிவிக்கிப்பட்டுள்ளது.
அந்தவகையில் முஸ்லிம் கூட்டமைப்பின் தேசியத் தலைவர் அலி சப்ரி பி.சி. சட்ட விவகாரங்களில் ஜனாதிபதியின் ஆலோசகராகராகவும், ஆணைக்குழுவின் கூட்டமைப்பின் தேசிய அமைப்பாளராகவும் ,
மத்திய மாகாண மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஏ.எல்.எம்.உவைஸ் ஹாஜியார் அவர்களும்,
பொதுச்செயலாளர் மூத்த வழக்கறிஞர் ராஸிக் ஸரூக், பி.சி., நியமியக்கப்பட்டுள்ளார்.
அந்தவகையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த உவைஸ் ஹாஜியார்,
இதுபோன்ற ஒரு கூட்டமைப்பு முஸ்லிம் சமூகத்தின் நீண்டகால தேவைப்பாடாக இருக்கின்றது அதன் முன்னேற்றம் மற்றும் பொதுவான புரிந்துணர்வு, உண்மை தன்மை மற்றும் குறிக்கோள்கள் தேவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
"ஸ்ரீலங்கா பொதுசன பெரமுன வின் முன்னேற்றத்தில் பங்காளிகளாக நாங்கள் இருக்க விரும்புகிறோம்,
இது மக்களின் சமூக முன்னேற்றத்திற்கான உண்மையான மற்றும் அர்ப்பணிப்பு இலக்குகளை வெளிப்படுத்துகிறது என்று உவைஸ் ஹாஜியார் கூறினார்.
அனேகமாக முஸ்லிம் மக்கள் வாழும் 25 மாவட்டங்களிலும் கிளைகளை அமைக்க கூட்டமைப்பு ஏற்பாடு செய்ய இருக்கின்றோம் என்றார்.
மேலும் தனது உரையில்,
"பெண்கள் விவகாரம், தொழில் வல்லுநர்கள், கல்வியாளர்கள், இளைஞர்கள், உலமாக்கள் (மார்க்க அறிஞர்கள்) மற்றும் அரசியல்வாதிகள் ஆகியோருக்கு தனித்தனி துறைகள் அமைப்பதற்கு விரும்புகிறோம்," என்று அவர் கூறினார்.
சட்டத்தரணி அலி சப்ரியின் தலைமையின் கீழ் சக்தி வாய்ந்த கூட்டமைப்பு செயல்பட உள்ளதாக உவைஸ் ஹாஜியார் குறிப்பிட்டார்.
சமூகத்தை ஒரு அழகிய முன்னேற்றத்திற்கு கொண்டு வருவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று கொண்டிருக்கிறது.
எனவே இதற்கான இப்போது கூட்டமைப்பிற்கான உறுப்பினர் அனைத்து முஸ்லிம்களுக்குமான சந்தர்ப்பத்தை நாம் வழங்குகிறோம்.
கூட்டமைப்பின் தலைமையகம் 520, மரதானை வீதி, கொழும்பு 10.
0777385355 என்ற தொலைபேசியைத் தொடர்பு கொண்டு அல்லது அலுவலகத்திற்குள் வருகை தந்து தங்களை கூட்டமைப்பின் உறுப்பினர்களாக இணைத்து கொள்ளலாம் என்றும் அவர் கூறினார்.
SLPP Muslim Federation is formed under the leadership of Ali Sabry and its National Organizer is A.L.M Uwais Hajiar Hajiar
COLOMBO: The Muslim Federation of the Sri Lanka Podujana Peramuna( SLPP) announced its key officials at its general meeting held under the patronage of Prime Minister Mahinda Rajapaksa at the Rosewood Banquet Hall in Kalubowila on Monday.
According to the announcements, the National Leader of the Muslim Federation will be Ali Sabry PC, who is the president’s advisor on legal matters, National Organizer of the Federation will be A.L.M.Uwais Hajiar former member of the Central Province Provincial Council while its Secretary-General will be senior lawyer Razick Zarook,PC, who is the Chairman of the Chairman at Insurance Regulatory Commission.
Speaking to the media Uwais Hajiar said such a Federation is a long felt need of the Muslim community which needs a common understanding, vision and goals for its progress and prosperity.
“ We want to be partners in progress with the SLPP which chalked out genuine and dedicated goals for the social uplift of the people,” Uwais Hajiar said.
He said the Federation hopes to set up branches in all 25 districts in places where there is density of Muslim population. “ We want to have separate departments for women’s affairs, professionals, academicians,youths,Ulamas (Islamic theologians) and politicians,” he said.
Uwais Hajiar said that the Federation is to function under a dynamic leadership of Ali Sabry, who has a vision to bring the community forward for its pristine glory. Now the membership for the Federation is open to all Muslims.
He said that the headquarters for the Federation is located at 520, Maradana Road, Colombo 10 and people can contact phone 0777385355 or walk into the office to enroll themselves as members of the Federation.