டெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து அணியில் Ben stokes முதலாவது இடத்திற்கு முன்னேறியுள்ளார்
ஆண்களுக்காக டெஸ்ட் கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசை நேற்றைய தினம் சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் வெளியிடப்பட்டது.
குறித்த சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசை பட்டியிலில் இங்கிலாந்து அணியின் சகல துறை ஆட்டக்காரர் Ben stokes 6 இடங்கள் முன்னேறி தரவரிசையில் முதலிடத்தை பிடித்துள்ளார்
மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த 16 ஆம் திகதி ஆரம்பமான நிலையில், ஐந்தாம் நாள் ஆட்டம் கடந்த 20 ஆம் திகதி இடம்பெற்றது.
நடைப்பெற்று முடிந்த இங்கிலாந்து மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கிடையிலான இரண்டு டெஸ்ட் தொடரில் சகல துறை ஆட்டக்காரர் Ben stokes 827 ஓட்டங்களை பெற்று சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசை பட்டியலில் முதலிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்
இதேவேளை 459 புள்ளிகளுடன் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் அணியின் Jason holder இரண்டாம் இடத்திலும் 397 புள்ளிகளுடன் இந்திய அணியின் ravindra jadeja மூன்றாம் இடத்திலும் சகலதுறை ஆட்டக்காரர்கள் தரவரிசை பட்டியிலில் இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.