ரணில், சஜித் வேறாகப் பிரிந்து போட்டியிட்டாலும் பிணைமுறி மோசடியிலிருந்து எவரும் தப்பிக்க முடியாது- சுசில் பிரேம்ஜெயந்த்.

பொதுஜன பெரமுன அலுவலகத்தில் நேற்று (09) நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர்,

அர்ஜுன் மகேந்திரன் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்கவே முழுப்பொறுப்பையும் ஏற்றிருந்தார். அவரின் ஆலோசனை பெற்றே பிணைமுறி விநியோகம் இடம்பெற்றது. மகேந்திரன் வெளிநாடு செல்லவும் ரணில் விக்கிரமசிங்க தான் இடமளித்தார்.

 இன்று ரணில் தரப்பும் சஜித் தரப்பும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. ஆனால் பிணைமுறி மோசடியிலிருந்து அவர்கள் இருதரப்பினராலும் தப்ப முடியாது. தற்போதைய ஜனாதிபதியோ பிரதமரோ அவருக்கு வெளிநாட்டுக்கு தப்பிச் செல்ல இடமளிக்கவில்லை.

எமது அரசு அரச சேவையை நசுக்குவதாக ரஞ்சித் மத்தும பண்டார குறிப்பிட்டுள்ளார். சஜித் ஆட்சியில் அவற்றை சரி செய்வதாகவும் அவர் கூறியுள்ளார். 2001-/2004 காலத்தில் தான் அரசு துறையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஓய்வூதியமும் நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.


கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்.

உங்கள் விளம்பரங்களுக்கும் அழையுங்கள்
077 61 444 61 /075 07 07 760

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -