எதிர் வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரிவினால் துறைசார்ந்த புத்தி ஜீவிகளுடனான விஷேட கலந்துரையாடல் ஒன்று நேற்றிரவு மருதானையில் இடம் பெற்றது.
முஸ்லிம் பிரிவின் உறுப்பினர் நவாஸ் முஸ்தபாவின் ஏற்பாட்டில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் முஸ்லிம் பிரிவின் தேசிய அமைப்பாளர் எம்.உவைஸ் ஹாஜியாரின் தலைமையில் இடம் பெற்ற இக்கலந்துரையாடலில் அமைப்பின் தலைவர் சட்டத்தரணி அலி ஸப்ரி கலந்து நாட்டின் தற்போதைய நிலைமைகள் அரசாங்கத்தின் செயற்பாடுகள் பற்றியும் எதிர்வரும் தேர்தலில் முஸ்லிம்களின் பங்குபற்றுதல்கள் கட்டாயம் இருக்க வேண்டும் போன்ற விடயங்களை சுட்டிக்காட்டினார்.
அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்தபோது ….
பலர் சொல்கிறார்கள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வந்தால் முஸ்லிம்களுக்கு பல அபாயம்கள் இருக்கும் என்று ஆனால் இன்று 8 மாதம் முடிந்துள்ளது அவரால் எந்த அபாயமும் இல்லை. நலவுதான் நடந்திருக்கின்றது. அவர் நாட்டைக் காப்பாற்றுகின்றார், பாதாள, தூல் வியாபாரம் மற்றும் கொவிட்-19 என்பனவற்றில் இருந்து நாட்டையும் நாட்டு மக்களையும் காப்பாறினார்.
தற்போது எங்களுக்கு தெரிகிறது எதிர்வரும் தேர்தலில் 127க்கும் 137க்கும் இடையில் பாராளுமன்ற உறுப்பினர்ளை எடுத்து எஸ்எல்.பி.பி அரசாங்கத்தை அமைக்க முடியும் எனவும் முஸ்லிம்கள் இனியும் பரிந்து செல்லாது பிரதானமான கட்சிகளுடன் சேர்ந்து வேலை செய்வதற்கு உதவுமாறும் அலி ஸப்ரி கேட்டுக் கொண்டார்.
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். உங்கள் விளம்பரத்துக்கு அழையுங்கள்- 077 61 444 61 / 075 07 07 760 |