அதிலும் மிகக் குறிப்பாக பல்கலைக்கழக மாணவர்கள் என்னும் போது தமது வாழ்வினது அடுத்த கட்டமானது சமூகத்தை நோக்கியதாகவே காணப்படுகின்றது. எனவே பல்கலைக் கழக மாணவர்கள் என்ற வகையில் சமூகத்தின் அடிநாதமாக பிரதானமாக எடுத்து நோக்க வேண்டிய இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை பற்றி சிந்தித்து செயல்பட வேண்டும்.
இலங்கையின் பல்கலைக்கழக அமைப்பை எடுத்து நோக்குகின்ற போது எல்லாச் சமயங்களையும் சேர்ந்த மாணவர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும், கல்வி சார்ந்த மற்றும் கல்வி சாராத ஊழியர்களும் இணைந்து பயணிக்க கூடிய நிலையில் காணப்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பத்தில் மாணவர்கள் தமது கல்வி செயற்பாடுகளின் போது, விளையாட்டு மற்றும் ஏனைய இதற நிகழ்வுகள், விடுதிகளில் இருக்கின்ற நேரங்களில் போன்ற பல்வேறு சூழ்நிலைகளில் தமது அடுத்த மத சகோதரர்கள் தம்மைத் தப்பெண்ணம் கொண்டு நோக்குகின்ற நிலை முறையினை உருவாக்கிவிடக் கூடாது.
நாட்டின் மிகப்பெரிய தலைமைத்துவ நிலையில் வகிக்க கூடியவர்களால் கூட ஏற்படுத்தப்பட முடியாத இன நல்லிணக்கத்தை பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்படுத்த முடியும். ஏனெனில் அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் எல்லா சமய மாணவர்களும் இணைந்து செயல்படக் கூடிய செயற்பாடுகளை, நிகழ்ச்சித் திட்டங்களை,பொழுது போக்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடியும்.
மாணவர்கள் என்ற ரீதியில் எம்மால் இயலாத காரியம் என்று எதுவுமே இல்லை. நாளைய சமுதாயம் மாணவர்களாலே கட்டியெழுப்ப படவிருக்கிறது. எனவே தான் இன நல்லிணக்கத்தை பல்கலைக்கழக சூழலில் இருந்தே ஏற்படுத்த முனைவோம் வெறும் வாயளவில் இவற்றைப் பற்றி பேசிக் கொண்டு இருக்காமல் வாழ்க்கைப் பாடமாக செயல்படுத்த முயற்சி செய்வோம்.

அது மட்டுமன்றி ஏனைய மத நண்பர்கள் மீதான நம் நட்பினை, அன்பினை அவர்கள் புரிந்து கொள்ளும் விதமாகவும் நடந்து கொள்ள வேண்டும். நட்பினை இன மத வேறுபாடு இன்றி வெளிப்படுத்த முனைய வேண்டும்.
நாட்டின் மிகப்பெரிய தலைமைத்துவ நிலையில் வகிக்க கூடியவர்களால் கூட ஏற்படுத்தப்பட முடியாத இன நல்லிணக்கத்தை பல்கலைக்கழக மாணவர்களால் ஏற்படுத்த முடியும். ஏனெனில் அதற்கான சந்தர்ப்பங்களும் வாய்ப்புக்களும் அதிக அளவில் காணப்படுகின்றன. பல்கலைக்கழகத்தில் எல்லா சமய மாணவர்களும் இணைந்து செயல்படக் கூடிய செயற்பாடுகளை, நிகழ்ச்சித் திட்டங்களை,பொழுது போக்கு நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய முடியும்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பிற சமய மாணவர்களை புரிந்து செயல்படக்கூடிய நிலைமைகள் உருவாகின்றன. இவை மாத்திரம் அல்லாமல் விடுதி வாழ்க்கையிலே பிற சமய நண்பர்கள் உடன் இணை இருக்க வேண்டிய சந்தர்ப்பம் காணப்படுகின்றது. இந் நிலையில் ஏனைய நண்பர்களுக்கு உதவி ஒத்தாசைகள், அவசர தேவைகள் என்பன ஏற்பட்டாலும் கூட இயலாது என்று கூறாமல் உடனே முன்வந்து உதவிகளை செய்ய வேண்டும். அது மட்டுமன்றி எச் சந்தர்ப்பத்திலும் தமது சமயம் மீதான தப்பெண்ணம் ஏற்படும் படி நடந்து கொள்ள கூடாது.
“இனி ஒரு விதி செய்வோம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம்”
இவ்வாறாக பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வகையில் சமூகத்தின் நலனைப் பேணி இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு சமயத்தவரினதும் விஷேச விழாக்கள், வைபவங்களின் போது அவர்களுடன் இணைந்து அவற்றில் கலந்துகொண்டு ஒற்றுமையை, அன்பினை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் உணவுபொருட்கள், பரிசுகள் போன்றவற்றை தங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களின் மூலமாக அன்பும் நட்பும் பலப்படுத்தப் படுகின்றது.
“இனி ஒரு விதி செய்வோம் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவோம்”
இவ்வாறாக பல்கலைக்கழக மாணவர்கள் என்ற வகையில் சமூகத்தின் நலனைப் பேணி இன நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் விதத்தில் நடந்து கொள்ள வேண்டும். மேலும் ஒவ்வொரு சமயத்தவரினதும் விஷேச விழாக்கள், வைபவங்களின் போது அவர்களுடன் இணைந்து அவற்றில் கலந்துகொண்டு ஒற்றுமையை, அன்பினை வெளிப்படுத்த வேண்டும். அத்துடன் உணவுபொருட்கள், பரிசுகள் போன்றவற்றை தங்களுக்கு இடையே பகிர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறான விடயங்களின் மூலமாக அன்பும் நட்பும் பலப்படுத்தப் படுகின்றது.
மாணவர்கள் என்ற ரீதியில் எம்மால் இயலாத காரியம் என்று எதுவுமே இல்லை. நாளைய சமுதாயம் மாணவர்களாலே கட்டியெழுப்ப படவிருக்கிறது. எனவே தான் இன நல்லிணக்கத்தை பல்கலைக்கழக சூழலில் இருந்தே ஏற்படுத்த முனைவோம் வெறும் வாயளவில் இவற்றைப் பற்றி பேசிக் கொண்டு இருக்காமல் வாழ்க்கைப் பாடமாக செயல்படுத்த முயற்சி செய்வோம்.
வழித்தடம்' - All University Muslim Student Association
M.N Fathima
Eastern University of Sri Lanka
கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம். |