மஸ்கெலியா நல்லதண்ணீர் பிரதான வீதியில் மண்சரிவு காரணமாக போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
நல்லதண்ணீர் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட மோகினி எல்ல பகுதியில் இன்று (07) திகதி 10 மணியளவில் பாரிய கற்களுடன் மண்திட்டு சரிந்து வீழ்ந்ததனால் நல்லதண்ணீர் ஊடான போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளன.
தற்போது போக்குவரத்தினை சீர் செய்வதற்கான நடவடிக்கைகளை வீதி போக்குவரத்து அதிகார சபை எடுத்துள்ளன.
தற்போது மத்திய மலை நாட்டில் பல்வேறு பிரதேசங்களில் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதனால் பல இடங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளன.எனவே வளைவுகள் நிறைந்த இந்த வீதிகளை பயன்படுத்தும் வாகன சாரதிகள் அவதானமாக வாகனங்களை செலுத்துமாறு போக்குவரத்து பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.