வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளிகள் மற்றும் நோயாளிகளை பார்வையிட வரும் நபர்களை டெங்கு நோயிலிருந்து பாதுகாக்க புகை விசுறும் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
வைத்தியசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் நோயாளர்கள் விடுதி, வைத்தியசாலை வளாகம் என்பவற்றிற்கு புகை விசுறும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
வாழைச்சேனை, ஓட்டமாவடி பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டு சிகிச்சை பெற்றுவருவதோடு, குறித்த பகுதிகளில் பெருகிவரும் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஆலோசனைகளுக்கு அமைய பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.