ஜீவன் தொண்டமானே அதிக விருப்பு வாக்குகள் பெறுவார்


தலவாக்கலை பி.கேதீஸ்-
நுவரெலியா மாவட்டத்தில் வெற்றிபெறும் 8 வேட்பாளர்களில் அதிக விருப்பு வாக்குகளை ஜீவன் தொண்டமானே பெறுவார்.

யார் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் எந்த கொம்பன் வேண்டுமானாலும் போட்டியிடட்டும் ஜீவன் தொண்டமானே முதலாம் இடம் பெறுவார் என என இ.தொ.கா உபதலைவரும் முன்னால் மத்திய மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்ன நுவரெலியா மாவட்ட வேட்பாளருமான பி.சக்திவேல் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை நகரில் இடம்பெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்துக்கொண்டு உரையாற்றும்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து அங்கு உரையாற்றுகையில்

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஜீவன் தொண்டமானின் வெற்றியை இந்த உலகிற்கு எடுத்துக்காட்டுவோம். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை நிரூபிப்போம். 

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் ஸ்தாபக தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமானுக்கு பின்னர் ஆறுமுகன் தொண்டமானை கொண்டுவந்தமோ அதேபோல ஜீவன் தொண்டமானையும் கொண்டு வருவோம்.

 இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு 80 வருட வரலாறு இருக்கின்றது. 

கட்சி ஆரம்பித்து 4 வருடம் கூட ஆகாத சிலர் ஆடும் ஆட்டங்களை பார்க்கும்போது அவர்களின் கையாலாகாத தனத்தையே எடுத்துகாட்டுகின்றது.

இலங்கையிலுள்ள அனைத்து தமிழர்களையும் பாதுகாக்க வேண்டுமானால் நுவரெலியா மாவட்டமே தலைமையகம்.இங்கே தான் நாம் அதிக வாக்குகளை பெற்றாக வேண்டும் அப்போதுதான் ஏனைய எமது மக்களை காப்பாற்ற முடியும். இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் மீது ஒரு அன்பு பக்தி மக்கள் மத்தியில் வரவேண்டும். 

எனது கட்சி காங்கிரஸ் எனது குடும்பம் காங்கிரஸ் என்ற உணர்வு வரவேண்டும். எமது காவல் தெய்வம் அமரர் ஆறுமுகன் தொண்டமான் மறைந்தாலும் அவர் எனக்கு கொடுத்த அங்கீகாரத்தை நான் காப்பாற்றுவேன். அவர் என்னை அங்கீகரித்துள்ளார். 

காட்டிக் கொடுக்கும் பழக்கம் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு இல்லை. கண்டவர்களுக்கு வாக்களிக்காதீர்கள். 

நன்கு சிந்தித்து வாக்களியுங்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரசின் கரங்களை பலப்படுத்துங்கள். யார் வேண்டுமானாலும் அரசியல் செய்யலாம் ஆனால் தொழிற்ச்சங்கம் எவராலும் செய்ய இயலாது.

 சாதாரண ஒரு அமைப்பு அமைப்பு இ.தொ.கா அல்ல.கோலம் இட்டு,பொங்கல் வைத்து,விளக்கேற்றி தூபமிட்டு பூஜை செய்து பாரத மாதாவிற்கு கொடியேற்றிய வரலாறுகள் இலங்கை தொழிலாளர் காங்கிரசுக்கு மட்டுமே உண்டு.இறைவனின் ஆசிர்வாதம் அதிகம் உண்டு. காங்கிஸின் கொள்கைகளை அனைவரும் ஏற்றுக்கொள்ளுங்கள்.

அதே பலம் அதே கொள்கை இந்த கட்சிக்கு ஒரு மாபெரும் சக்தி இருக்கின்றது. இந்த நாட்டில் ஒரே மாதிரியான சக்தியுடன் சௌமியமூர்த்திதொண்டமான் அதன்பின்னர் ஆறுமுகன் தொண்டமான் திகழ்ந்தார்கள். 

இன்று அதே பலம் அதே சக்தியுடன் ஜீவன் தொண்டமான் திகழ்கின்றார்கள். நாங்கள் எப்படி சௌமியமூர்த்தி தொண்டமான்,தேசிய தலைவர் ஆறுமுகன் தொண்டமானை பார்த்தோமோ அதேபோல் ஜீவன் தொண்டமானை பார்க்கின்றோம் பார்த்துக்கொண்டிருக்கின்றோம்.எனவே இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பலத்தை எதிர்வரும் தேர்தலிலே நிரூபித்து காட்டுங்கள். 

பொதுஜன பெரமுனவின் மொட்டு சின்னத்தில் போட்டியிடும் எங்களுக்கு வாக்களித்து எங்களை அமோக வெற்றிபெறச் செய்யுங்கள் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -