கதிர்காமத்தில் 17வருடகால அன்னதானம் நிறுத்தம்!

காரைதீவு  சகா-
திர்காம ஆடிவேல்விழாவையொட்டி கடந்த 17வருட காலமாக நடாத்திவந்த அன்னதானம்நாட்டின் கொரோனா சூழ்நிலைகருதி இம்முறை நிறுத்தப்பட்டுள்ளதாக
அனனதானசபையின் இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.


கடந்த 17வருடகாலமாக இந்துகலாசாரதிணைக்களத்தின் கதிர்காம இந்து
யாத்திரிகர் விடுதியில் சிவபூமி அன்னதான தொண்டர் சபையினரால் அன்னதானம்சிறப்பாக நடைபெற்றுவந்தன. 

அதில் பல லட்சக்கணக்கான பக்தஅடியார்கள்
பசியாறிவந்தனா.

ஆனால் இம்முறை அதனை நடாத்தக்கூடிய சூழ்நிலை இல்லை ஆதலால்
அது நிறுத்தப்பட்டுள்ளது என்பதை அனைவருக்கும் தெரிவிக்கிறோம் என
இணைப்பாளர் எஸ்.ஞானசுந்தரம் தெரிவித்தார்.

இதேவேளை இந்து யாத்திரீகர் விடுதியும் இம்முறை பக்தர்களுக்கு அல்லாமல்கொரோனாத்தடுப்பு அலுவலர்கள் தங்குவதற்கான தங்ககமாக
பயன்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எமது தலைவரும் இலங்கை இந்துமாமன்றத்தின் தலைவருமான எம்.தவயோகராசாபிரதித்தலைவர் ரி.குழந்தைவேல் செயலாளர் என்.பேரின்பநாயகம் பொருளாளர்எ.ஆனந்தராசா ஆகியோர் வழமைபோல் தொடர்ந்து அன்னதானம் வழங்குவதில் சிரத்தை
எடுத்தனராயினும் அதற்கான அனுமதி கிடைக்கப்பெறாமையினால் அதுநிறுத்தப்பட்டுள்ளதென்பதை மனவருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறோம்.என்றார்.

கதிர்காமத்திற்கான விசேட பஸ்சேவைகள் ரத்து.

கதிர்காமம் மற்றும் உகந்தமலைமுருகனாலய ஆடிவேல்விழாக்காலங்களில்
மேற்கொள்ளப்படும் வழமையான விசேட போக்குவரத்து ஒழுங்குகள் நாட்டின் கொரோனா
கட்டுப்பாடுகள் காரணமாக மேற்கொள்ளப்படவில்லையென தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் சகல பாகங்களிலுமிருந்தும் பல பஸ் டிப்போக்களும்
கதிர்காமத்திற்கான பஸ்சேவைகளை நடாத்திவந்தமை தெரிந்ததே. ஆனால் இம்முறைபக்தர்களுக்கு அங்கு அனுமதி மறுக்கப்பட்டிருப்பதனால் பஸ்சேவைகள்
இடம்பெறவில்லை.

கல்முனையிலிருந்து கதிர்காமத்திற்கும் உகந்தைக்குமான பஸ் சேவைகள்
இம்முறைநடாத்தப்படவில்லை என கல்முனைச்சாலை அத்தியட்சகர் வெள்ளத்தம்பிஜௌபர் தெரிவித்தார்.

இச்சேவைகளினால் கடந்தகாலங்களில் டிப்போவிற்குமிகுந்த வருமானம் கிடைக்கப்பெற்றிருந்தது.இம்முறை கொரோனா அதனை
நிறுத்தியுள்ளது என்றார்

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -