போதைப்பொருளுக்கு உடந்தையான அரசியல்வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும்...

போதைப்பொருள் பாவனைக்கு காரணமான அரசியல் வாதிகளை மக்கள் விரட்டியடிக்க வேண்டும் என வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் இடித்துரைப்பு

நாட்டு மக்களாகிய நாம் முழுமையாக மதுவிலக்கை கடைப்பிடிக்க வேண்டும். கஞ்சா கள்ளச்சாராயம் என்பனவற்றை கிராமத்தில் இருந்து விரட்டியடிக்கப்பட வேண்டும்.

முன்னர் ஊர்களில் ஒரு சிலர் கஞ்சா மற்றும் கள்ளச்சாராயம் காய்சினார்கள் இன்று அது பல மடங்காக அதிகரித்து விட்டது . இப்பொழுது இதை நாம் தடுக்காவிட்டால் போதைப்பொருட்களால் இந்த சமுதாயம் அழிந்து விடும்.ஒட்டுமொத்தத்தில் கள்ளச்சாராயம் தயாரிப்பவர்கள் கஞ்சா கடத்தும் அரசியல்வாதிகளை சமூகத்திலிருந்து ஒட்டுமொத்தமாக விரட்டியடிப்போம்.தற்போது நாட்டில் கள்ளச்சாராயம் ஏற்றிவந்த அரசியல் வாதிகள் மற்றும் வேட்பாளர்கள் கூட பிடிபட்டிருக்கிறார்கள். 

நீண்டகாலமாக போதைப்பொருள் கடத்திய இப்போது கடத்தல் செய்கின்ற மற்றும் வியாபாரம் செய்கின்ற அரசியல் வாதிகளை இந்த அரசியல் மேடைகளில் இருந்தே ஒட்டுமொத்தமாக வெளியேற்றப்பட இந்த மக்கள் ஒன்றுபட்டு பாடுபடவேண்டும்.என முன்னாள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்கள் குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -