ஒலுவில் அமீர்-
ஒலுவிலில் சகல வசதிகளையும் கொண்டு புதிதாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இலங்கை வங்கியின் கிளை மற்றும் பணப்பரிமாற்ற இயந்திரமும் உதவிப் பொது முகாமையாளர் திருமதி.குமுதினி ஜே.யோகரத்திணம் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு நேற்று 2020-06-23 திறந்து வைத்தனர்.
வங்கி முகாமையாளர் ஏ.எல்.எம் மஹ்ஜுத் அவர்கள் தலைமையில் இடம் பெற்ற இத்திறப்பு விழா வைபவத்தில்;; கௌரவ அதிதிகளாக பிராந்திய முகாமையாளர் யு.ஆர் ஜெயதிலக்க செயற்பாட்டு முகாமையாளர் எம்.டி.எஸ் எக்கநாயக்க ஆகியோர்கள் கலந்து கொண்டதுடன் வாடிக்கையாளர்கள் பணப்பரிமாற்ற நிகழ்வை ஆரம்பித்தும் வைத்தனர். இதில் வாடிக்கையாளர்களுக்கு பரிசும் வழங்கப்பட்டது.