ஞானசார தேரருக்கு எதிராக விசாரணையில் இருந்து விலகினார் நீதிபதி!

ஜே.எப்.காமிலா பேகம்-

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளரான ஞானசார தேரருக்கு வழங்கப்பட்ட பொதுமன்னிப்பிற்கு எதிரான மனு மீது விசாரணை வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதிவரை உச்சநீதிமன்றத்தினால் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த மனு மீது இன்று விசாரணை நடைபெற்றபோது மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமிலுள்ள பிரீத்தி பத்மன் சுரசேன என்கிற நீதியரசர் விசாரணையிலிருந்து விலகுவதாக அறிவித்தார்.

இந்த மனு விசாரணையில் சம்பந்தப்படுகின்ற ஞானசார தேரர் மீதான நீதிமன்ற அவமதிப்பு வழக்கு மேன்முறையீட்டு நீதிமன்றில் இடம்பெற்றபோது விசாரணைக்கு நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமை வகித்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனுவை ஓகஸ்ட் வரை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

காணாமலாக்கப்பட்ட பிரகீத் எக்னலிகொடவின் மனைவி சந்தியா எக்னலிகொட மற்றும் மாற்றுக்கொள்கைக்கான நிலையம் ஆகியோர் இந்த மனுவை தாக்கல் செய்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -