கிழக்குமாகாண முன்னாள் முதலமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளருமான ZA.நஷீர் அஹமட் அவர்களை ஆதரித்து ஏறாவூர் மிச்நகர் (தாமரைக்கேணி ) வட்டாரத்தில் சகோதரர் M.கனிபா தலைமையில் நேற்று 26.06.2020 விசேட கருத்தரங்கு நிகழ்வு இடம் பெற்றது...
இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் ZA.நஷீர் அகமட் கலந்து சிறப்பித்ததோடு ,ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உயர்பீட உறுப்பினரும் தபாலக அதிபருமான நஸீர் ஹாஜியார் ,ஏறாவூர் நகரசபையின் முன்னாள் தவிசாளர் MI.தஸ்லிம் மற்றும் மிச்நகர் வட்டார சகோதரர்களான MH.சபூர்தீன் ஹாஜியார்,
M தஸ்தகீர், இர்சாத், றிபாஸ் ,தன்ஸில் ஆகியோருடன் இன்னும் பல இளைஞர்கள்,பெண்கள் , பொதுமக்கள் என பலரும் இக்கருத்தரங்கில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது....
தொடர்ந்து இந் நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிறப்புரையாற்றியபோது...
எமது மாகாணத்தில் பெண்கள் மத்தியகிழக்கு நாடுகளுக்கு செல்வதை முற்றுமுழுதாக தடுக்கப்பட வேண்டும் என்ற நோக்கிலும் இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புத்திட்டங்களையும் உருவாக்கி சிறந்த சமுதாயத்தை உருவாக்கும் எண்ணத்தில் தனியார் துறைகளிலும் அரச துறைகளிலும் இளைஞர் யுவதிகளை உள்வாங்குவதே நோக்காகும் என்று தனது உரையில் சுட்டிக்காட்டியதோடு.
தனது ஆட்சிக்காலத்தில் பல்வேறுபட்ட பிரதேசங்களின் அபிவிருத்திகளுக்கு வித்திட்டதுபோல் இம்முறை எனது கைகளுக்கு அதிகாரம் கிடைக்கும் போது விடுபட்ட அபிவிருத்திகளும், தூரநோக்கோன அபிவிருத்திகளும் தொடரும் என்பதை தனது உரையில் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது ....
மு.முதலமைச்சர் ஊடகப்பிரிவு-கல்குடா
