ஒரு கோடி ரூபா செலவு செய்து ஓரங்கட்டப்பட்ட தகனச்சாலை மீண்டும் மக்கள் பாவனைக்கு.


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
ரு கோடி ரூபா செலவு செய்து ஓரங்கட்டப்பட்டிருந்த நோர்வூட் மைதானத்தில் அமைக்கப்பட்ட தகனச்சாலை நோர்வூட் பிரதேச சபை பொருப்பேற்றதன் பின் மீண்டும் புனர் நிர்மானம் செய்து திறப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக நோர்வூட் பிரதேசசபையின் தலைவர் கே.கே.ரவி தெரிவித்தார்.
புனரமைக்கப்பட்ட தகனச்சலையினை ஒத்திகை பார்க்கும் நிகழ்வு நேற்று (16) மாலை நடைபெற்றது அதன் போது கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில் ..2003 ம் ஆண்டு குறித்த தகனச்சாலை மறைந்த அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் ஒரு கோடியே ரூபாவுக்கு அதிகமான செலவில் மஸ்கெலியா பொகவந்தலாவை நோர்வூட் பிரதேசங்களை உள்ளடக்கும் வகையில் இறக்கின்ற நபர்களின் பிரேதங்களை தகனஞ் செய்வதற்காக நிர்மானிக்கப்பட்டுள்ளது.
எனினும் நிர்மானித்துக்கு கொண்டிருக்கும் நிறைவு செய்வதற்கு போது மான பணம் உடனடியாக பெற்றுக்கொடுக்காமையினால் காலதாமதமடைந்துள்ளன. இந்நிலையில் இந்த தகனஞ்சாலையில் பொருத்தப்பட்டிருந்த கதவு ஜன்னல்கள் உட்பட இதர பொருட்கள் பிரதேச வாசிகளால் களவாடப்பட்டுள்ளன.
இதனால் இதன் நிர்மானப்பணிகள் கைவிடப்பட்டிருந்தன.அதனை தொடெர்ந்து நோர்வூட் பிரதேச சபை பொருட்பேற்றதன் பின் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு பிரதேசத்தின் தேவைகருதி குறித்த தகனஞ்சாலையினை புனரமைப்பதற்கு நடிவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த தகனஞ்சாலை புனரமைப்பதற்கு திருத்து பணிகளுக்கு இருபது லட்சம் ரூபாவும்,வெளி தோற்ற நிர்மானப்பணிகளுக்காக இருபது லட்சம் ரூபாமுமாக மொத்தம் 40 லட்சம் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளன.
இந்த தகனஞ்சாலையினை நிர்மானிப்பதற்கு முன் மக்கள் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.பிணம் ஒன்றினை தகனஞ் செய்ய வேண்டும் என்றால் கொட்டகலைக்கோ அல்லது தலவாக்கலைக்கோ கொண்டு செல்ல வேண்டும். இதனால் பொகவந்தலா,மஸ்கெலியா,நோர்வூட் உள்ளிட்ட சுமார் 120.000 அதிகமான பொது மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கினர். பலர் நேரத்திற்கு செல்ல முடியாத பல பிரச்சினைகளுக்கும் முகம் கொடுத்துள்ளனர்.அத்தோடு அதிக பணமும் செலவிட வேண்டிய நிலை ஏற்பட்டது இந்நிலையில் இதனை புனரமைத்ததன் மூலம் குறித்த மக்கள் பல்வேறு நன்மைகளை அடைகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -