அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து முஸ்லீம் காங்கிரஸ் தலைமை தலை நிமிர்ந்து நிற்க இளைஞர்கள் அனைபேரும் அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும்.


முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சர் உதுமாலெப்பை

எம்.ஜே.எம்.சஜீத்-
டைபெற உள்ள பாராளுமன்ற தேர்தல் மிக முக்கியமானதாகும். சிறுபான்மை சமூகங்களின் பேரம் பேசும் சக்தியை இல்லாமல் செய்வதோடு இனவாதிகள் பல திட்டங்கள் தீட்டி முஸ்லீம் மக்களுக்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டு பெறும்பான்மை மக்களிடமிருந்து அதிகப்படியான பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று சிறுபான்மையினரை அடக்கி ஆள முயற்சிகள் செய்து வருகின்றனர். எனவே, பாராளுமன்ற தேர்தலில் அதிகமான முஸ்லீம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்களை தெரிவு செய்து நமது தலைமைத்துவம் தலை நிமிர்ந்து நிற்க இளைஞர்கள் அர்ப்பணிப்போடு இத் தேர்தல் நடவடிக்கைகளில் ஈடு பட வேண்டும் என அட்டாளைச்சேனையில் நடைபெற்ற அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர்;கள் ஒன்று கூடலில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை தெரிவித்தார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.நசீர், அட்டாளைச்சேனை பிரதேச இளைஞர் அமைப்புக்களின் தலைவர்கள் கலந்து கொண்ட இக்கூட்டத்தில் தொடர்ந்து உரையாற்றுகையில் அன்று பெறும் தலைவர் எம்.எச்.எம்.அஸ்ரப் அவர்கள் முஸ்லீம் காங்கிரஸ் கட்சியினை ஆரம்பித்த போது கிழக்கு மாகாணத்தில் ஐ.தே.கட்சியின் அரசாங்கம் ஆட்சி செய்தது. முஸ்லீம் பிரதேசங்கள் முழுவதும் அமைச்சர்கள் இருந்தார்கள். இருந்த போதும் கிழக்கு மாகாண இளைஞர்கள் ஒற்றுமைப்பட்டு தலைவர் அஸ்ரப் அவர்களில் நம்பிக்கை கொண்டு மக்கள் பலத்தின் மூலம் தலைவர் அஸ்ரப் அவர்கள் மக்கள் பலம் உள்ள தலைவர் என்பதனை நிரூபித்துக் காட்டினோம். இதற்காக கிழக்கு மாகாண ஆயிரக் கணக்கான இளைஞர்கள் ஒன்று திரண்டு தலைவர் அஸ்ரபினால் உருவாக்கப்பட்ட முஸ்லீம் காங்கிரஸின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்போடு செயற்பட்டோம்.

இலங்கை அரசின் வரலாற்றில் வெகு வேகமாக வளர்ந்த கட்சியாக முஸ்லீம் காங்கிரஸ் திகழ்ந்தது. இன்றைய காலத்தில் நமது நாட்டில் முஸ்லீம் சமூகத்துக்கு எதிரான செயற்பாடுகள் திட்டமிடப்பட்டு நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது 'கொரோணா' நோயினால் மரணம் அடைந்தவர்களின் ஜனாசாக்களை எரிக்காமல் அடக்கலாம் என உலக சுகாதார அமைப்பினால் சுற்று நிருபம் அனுப்பப்பட்டும் உலக நாடுகள் இச் சுற்று நிருபத்தின் படி செயற்பட்டுக் கொண்டிருந்த வேளையில் இலங்கையில் மாத்திரம் முதலாவது கொரோணா நோயாளி மரணம் அடைந்த முஸ்லீம் ஒருவரின் ஜனாசாவை எரித்து விட்டு அடுத்த நாள் காலையில் உலக சுகாதார அமைப்பின் சுற்று நிருபத்தினை கருத்தில் கொள்ளாமல் இனிமேல் கொரோணா நோயினால் மரணம் அடைந்தவர்களை எரிப்பதற்கான சுகாதார அமைச்சினால் தீர்மானம் எடுத்தார்கள் இச்செயற்பாடானது இலங்கையில் வாழும் முஸ்லீம் மக்களின் மனங்களை புன்படுத்திய வண்ணம் இப்போதும் உள்ளது. கொரோணா நோய் இல்லாத 42 வயது முஸ்லீம் பெண்ணின் ஜனாசாவை எரித்துள்ளனர். இச்செயற்பாடுகள் முஸ்லீம் சமூகத்தினை நோக்கியதாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன.

எமது இஸ்லாம் மார்க்கம் ஜனாசாக்களை நோகாமல் குளிப்பாட்டி, கபன் இட்டு அடக்கம் செய்யச் சொல்கின்றது. இதற்கு எதிராகவே இச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இந் நிலமையில் அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கிய, வழங்கி வருகின்ற முஸ்லீம் அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி, பிரதம மந்திரியிடமும் காலில் விழுந்தாவது எமது முஸ்லீம் ஜனாசாக்களை எரிப்பதனை நிறுத்தி புதிய சுற்று நிருபத்தினை வெளியிட சக்தி இல்லாதவர்கள். நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் முஸ்லீம்களின் வாக்குகளை தங்களுக்கு வழங்குமாறும், தாங்கள் அமைச்சர்களாக பதவி ஏற்க உள்ளதாகவும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். முஸ்லீம்களின் ஜனாசாக்களை எரிப்பதனை நிற்பாட்டாமல் அமைச்சர்களாகி சமூகத்துக்கு எதனை கிழிக்கப் போகின்றனர் எனக் கேட்க விரும்புகின்றேன்.
எனவே நடைபெற உள்ள பொதுத் தேர்தலில் வேட்பாளர்களின் பெயர்கள் அறிவிக்கப்பட்டிருந்தும் இது வேட்பாளர்களின் தேர்தல் அல்ல நமது எதிர்காலம் எவ்வாறு அமையப் போகின்றது என்பதனை தீர்மானிக்கும் தேர்தலாகும். எனவே அட்டாளைச்சேனை பிரதேசத்தில் மாத்திரம் 1000 இளைஞர்களை ஒன்று சேர்த்து இத்தேர்தல் நடவடிக்கைகளை அவர்களிடமே ஒப்படைக்க உள்ளோம். நாளைய தலைவர்கள் ஆகிய நீங்கள் இந்த சமூகத்தின் நலனுக்காக அர்ப்பணிப்போடு செயற்பட வேண்டும் என கேட்டுக் கொள்கின்றேன். மனிதனின் வாழ்க்கையில் பாடசாலைப் பருவம், இளமைப் பருவம் என்றும் மறந்து போவதில்லை இளைஞர்கள் 35 வயதுக்குள் உங்களின் உணர்வுகள், நடவடிக்கைகள், சமூகப்பற்று உங்களுக்கான அடையாளத்தை அறிவிக்கும். எனவே, இளமைப் பருவத்தில் நமது சமூகத்தின் நலனுக்காகவும், எதிர்காலத்துக்காகவும் செயற்பட்டு நல்ல பெயருடன் வாழ வேண்டும். தற்போதைய சூழ்நிலையில் நமது சமூகம் எதிர்நோக்கும் சவால்களை எதிர்கொள்வதற்கு முஸ்லீம்கள் அனைபேரும் முஸ்லீம் காங்கிரஸை வளப்படுத்த வேண்டிய பாரிய பொறுப்பு நாம் எல்லோருக்கும் உள்ளது என தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -