இ.தொ.கா பொதுச்செயலாளராக ஜீவன் தொண்டமான் நியமனம்


ஹட்டன் கே.சுந்தரலிங்கம்-
மைச்சர் ஆறுமுகன் தொண்டமான் மறைவினையடுத்து பொதுச்செயலாளர் நியமனம் வெற்றிடமாகவே காணப்பட்டன இந்த நியமனம் தொடர்பாகவும் தலைவர் பதவி தொடர்பாகவும் தேர்தல் பின்னரே நியமிப்பதாக தெரிவித்த போதிலும் இன்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் அரசியல் பேராளர் சபை அவசரமாக கூடி ஜீவன் தொண்டமான் அவர்களை பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராக கடமையாற்றிய அனுசியா சிவராஜா அவர்களை உபதலைவர் ஆகவும் இன்று ஏகமனதாக நிமித்துள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸ்ஸின் பேராளர் மாநாடு இன்று (17.06.2020) கொட்டகலை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பிரதான அலுவலகத்தில் நடைபெற்றுத. அதன் போது ஜீவன் தொண்டமான் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். இந்த தெரிவு குறித்து இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் நிதிச்செயலாளர் மருதபாண்டி ரமேஸ்வரன் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்.
அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவினை அடுத்து வெற்றிடமாக காணப்பட்ட பொதுச் செயலாளர் பதவிக்கு இலங்கை தொழிலாள் காங்கிரஸ்ஸின் பேராளர் சபை பொதுச் சபை நிர்வாகச் ஆகியன கூடி இன்று பொது செயலாளராக ஜீவன் தொண்டமான் அவர்கனை நியமிதுள்ளது.
இன்று கட்சியின் தேவை கருதியே இந்த நியமனம் செய்யப்பட்டுள்ளது. இதன் போது உபதலைவராக ஆனுசியா சிவராஜா அவர்களையும் நியமிக்கபபட்டுள்ளன.
தேர்தல் முடிவடைந்த பின் கட்சி தலைவரை இதே போன்று அனைத்து முக்கிய சபைகளும் கூடி தலைவரை தெரிவு செய்யவுள்ளதாகவும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்பது ஒரு குடும்பம் என்பதனால் அதில் எவ்வித பிளவும் இல்லை என்றும் அவர் இதன் போது தெரிவி;;த்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -