எம்.என்.எம்.யஸீர் அறபாத்-
இன்றைய அரசியல் " அண்ணன் எப்ப சாவான்? திண்ணை எப்ப காலியாகும்?" என்ற நிலையில், பலரையும் எதிர்பார்ப்புகள் கொண்ட நபராக மாற்றியிருப்பதைக் காணலாம்.
அரசியலுக்கு பலர் வரும்போது பாராளுமன்ற ஆசனத்தில் அமரவேண்டும் என்ற கனவுகளுடேனேயே வருகிறார்கள். ஆனாலும் ஒரு சிலேரே சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் வருவதை பார்க்கலாம்.
சமூகத்தில் நல்ல தலைமைத்துவங்களை உருவாக்கவேண்டும் என்ற எண்ணத்தில் கடந்த பொதுத்தேர்தலில் களம் கண்ட கணக்கறிஞர் றியாழை, இன்றைய அரசியல் போக்கில் விசித்திரமான மனிதராக பார்க்கிறேன்.
அடாவடி அரசியல் கோலோச்சுக் கொண்டிருந்த காலத்தில், புதிய அரசியல் கலாச்சாரத்தை கல்குடா மண்ணில் ஏற்படுத்தும் நோக்கில், அன்றைய தனது தேர்தல் களத்தை பயன்படுத்தினார்.
அதனைத் தொடர்ந்து அரசியலில் பல மாற்றங்களை உருவாக்கி,இளம் தலைமுறைக்கு உதாரணமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டார்.
அரசியலில் ஒருவர் பிரவேசித்து அதிகாரங்களை பெற்றுக் கொண்டால், அதனை தொடர்ந்தும் தக்கவைத்துக் கொள்வதிலேயே கவனமாக இருப்பார்கள். நல்ல தலைமைத்துவங்கள் உருவாக்குவதற்கு மட்டுமல்ல உருவாகுவதற்கும் விரும்ப மாட்டார்கள். சிலர் அரசியலில் ஒரு கட்சியில் போட்டியிட்டு தோல்வி கண்டால், அடுத்த தேர்தலில் மாற்று கட்சி மேடைகளிலேயே பெரும்பாலும் காணலாம்.
ஆனாலும் றியாழ் கடந்த பாராளுமன்ற தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸில் அறிமுக வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற முடியாதுபோனாலும், வாக்களித்த மக்களுக்காக தன்னாலான அனைத்து பணிகளையும் இன்றுவரை செய்து கொண்டிருக்கிறார்.
இம் முறை பொதுத்தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற வாய்ப்பிருந்த போதிலும், தனக்கான இடத்தை விட்டுக் கொடுத்து, இளம் தலைமைத்துவம் உருவாகுவதற்கு வழிகாட்டியிருக்கிறார்.
தான் இல்லை என்றால் அந்த இடத்திற்கு மற்றவர்கள் வந்துவிடக்கூடாது என நினைப்பவர்களுக்கு மத்தியில் றியாழ் அவர்களின் இத்தகையே செயற்பாடு எதிர்கால சந்ததியினாருக்கு முன்மாதிரியாக இருக்கிறது
